இளைஞரின் பிறப்புறுப்பில் புகுந்த அட்டை.! துடிதுடிக்க இளைஞருக்கு அரங்கேறிய சோகம்.. பதறிப்போன மருத்துவர்கள்.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா பகுதியை சார்ந்த இளைஞரொருவர் கடந்த சில நாட்களாகவே பிறப்புறுப்பில் அதிகளவு வலி ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வந்துள்ளார். நீர்கடுப்பின் காரணமாக வலி ஏற்பட்டு இருக்கலாம் என்று அவர் எண்ணியுள்ளார். 

நீர்கடுப்பிற்கு செய்ய வேண்டிய சிகிச்சையை செய்தால் சரியாகிவிடும் என்று எண்ணி இருந்த நிலையில்., பிறப்புறுப்பில் வலியானது தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. 

இதனையடுத்து தன்னால் வலி பொறுக்க இயலாது துடித்த இளைஞர்., அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று விஷயத்தை கூறியுள்ளார். இதனையடுத்து இவரை பரிசோதனை செய்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சியொன்று காத்திருந்துள்ளது. 

இவரது பிறப்புறுப்பில் மலைப்பகுதியில் இருக்கும் அட்டைப்புழுவானது நுழைந்துள்ளதை அறிந்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளகிள்ளனர். அட்டைப்புழு குறித்து பாதிக்கப்பட்ட இளைஞரிடம் விசாரித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இளைஞர் அங்குள்ள குளத்தில் குளிக்க சென்றதாக தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து மருத்துவர்களின் சோதனையில் நூலிழை அளவு கொண்ட அட்டை புழுவானது., இளைஞரின் பிறப்புறுப்பு வழியாக நுழைந்து சென்ற நிலையில்., அவரது இரத்தத்தை குடித்து சுமார் 7 செ.மீ அளவிற்கு வளர்ந்துள்ளதை அறிந்து அதிர்ச்சியாகியுள்ளனர். 

பின்னர் மருத்துவர்கள் பிரத்தியேக சிகிச்சை மற்றும் கருவிகளை வைத்து., இளைஞரின் பிறப்புறுப்பில் இருந்த அட்டையினை வெளியே எடுத்துள்ளனர். தற்போது இளைஞர் நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kerala youngster affect warm to inside of urine part


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->