கேரளாவிற்கு மஞ்சள் அலர்ட்.! வானிலை மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கேரள மாநிலத்தில் கடந்த வருடம் ஜூன் மாதத்தின் போது., முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழையானது பெய்ய துவங்கியது. இந்த மழை விடாது பெய்ததன் எதிரளொளியாக., ஆகஸ்ட் மாதம் வரை பெய்து., ஆகஸ்ட் மாதத்தின் போது தீவிரமடைந்து பலத்த மழையை வெளியேற்றியது. 

இதனையடுத்து ஆங்காங்கே ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து., பல மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்., மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளில் நிவாரண முகாம்களும் திறக்கப்பட்டு., வீடுகளை இழந்து தவித்து வந்த மக்களை தங்க வைத்தனர். 

kerala flood seithpunal, kerala flood, கேரள வெள்ளம், கேரள மழை வெள்ளம்,

மேலும்., கேரளாவில் உள்ள பல மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையான அளவு பாதிப்படைந்த நிலையில்., அங்குள்ள மலப்புரம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் கடுமையான அளவு நிலச்சரிவு ஏற்பட்டு., பல மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது போன்ற மற்றொரு நிலை மீண்டும் வர கூடாது என்று மக்கள் வேண்டிக்கொண்டு இருந்த நிலையில்., தற்போது கனமழை எச்சரிக்கை வெளியாகியுள்ளது. 

கேரள மாநிலத்தில் உள்ள சுமார் 10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை அம்மாநில மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள கொல்லம்., ஆலப்புழா., இடுக்கி., கோட்டயம்., வயநாடு., கோழிக்கோடு., மலப்புரம்., எர்ணாகுளம்., கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

kerala flood seithpunal, kerala flood, கேரள வெள்ளம், கேரள மழை வெள்ளம்,

இந்த அறிவிப்பை வெளியிட்ட கொச்சி வானிலை ஆய்வு மையமானது., மேற்கூறிய 10 மாவட்டங்களுக்கு "மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert)" விடுத்துள்ளது. மேலும்., மழை பெய்யும் நேரத்தில் காற்று பலமாக வீசக்கூடும் என்பதால்., பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைப்போன்று கடலும் இரண்டு நாட்களுக்கு சீற்றத்துடன் காணப்படலாம் என்றும்., மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kerala weather report announce 10 district yellow alert


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->