ஆசிரியர்களின் சம்பளத்திற்கு ஆப்படித்து திருடன் செய்த காரியம்.. கண்ணீர் வடிக்கும் ஆசிரியர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் உள்ள கண்ணனூர் மாவட்டத்தில் இருக்கும் தலசேரியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி அரசு நிதிஉதவி பெரும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 640 மாணவ - மாணவியர்கள் பயின்று வரும் நிலையில், ஊழியர்கள் சுமார் 44 பேர் பணியாற்றி வருகின்றனர். 

கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாக இப்பள்ளியில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த பள்ளியின் பூட்டினை உடைத்து, தலைமையாசிரியர் அறைக்குள் புகுந்த மர்ம நபரொருவர் ரூ.40 ஆயிரம் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்புடைய கேமராவை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

திருடன் தற்போது வரை சிக்காத நிலையில், பள்ளியில் கண்காணிப்பிற்காக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக இதே பள்ளியில் மீண்டும் இதே திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நேரத்தில் வந்த திருடன் 3 மடிக்கணினி மற்றும் பென் டிரைவ், ஹார் டிஸ்க் போன்றவற்றை திருடி சென்றுள்ளான். இதனையடுத்து தலைமையாசிரியர் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

தற்போது திருடுபோன பென் டிரைவில் பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவேடு குறித்த தகவல் இருந்துள்ளது. இதனையடுத்து ஆசிரியர்கள் கூடி ஆலோசனை செய்து, திருடனுக்கு கடிதம் எழுதி சமூவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த கடிதத்தில், அன்புள்ள திருடன் அவர்களுக்கு, நீ யார் என்பது தெரியாது, நீதான் எங்களின் பள்ளியில் திருடியுள்ளாய். இதற்கு முன்னர் நீ காட்டிய கைவரிசைக்கும் காவல் துறையினர் விழி பிதுங்கி உள்ளனர். இந்த முறையும் இதனையே செய்துள்ளாய். நீ எடுத்து சென்ற டிஜிட்டல் சிக்னேச்சர் அடங்கிய பென் டிரைவை மட்டும் திரும்பி கொடுத்துவிடு. அதை வைத்துதான் எங்களுக்கும் சம்பளம் கொடுப்பார்கள். 

இது இல்லாததால் எங்களுக்கு சம்பளம் கிடைக்காது. பிற செலவுக்கும் பணம் கிடைக்காது. வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு மருந்து, கடனுக்கான வட்டி, வட்டிக்கான அபராதம் என்று எங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். தயவு செய்து அந்த பென் டிரைவை கொடுத்துவிடு. இனி வேறு பள்ளிக்கூடத்தில் திருடாதே, உழைத்து வாழ்.. என்று கூறப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Kerala school thief theft digital sign attendance pen drive


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->