#வீடியோ: கரோனா அறிகுறி.. பூரண நலன்..! ஆரவாரத்துடன் வீட்டிற்கு அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம், பாதிக்கப்பட்டோர்.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் அடுத்தடுத்து உயரும் பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். 

இந்தியாவின் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கேரளா அதிகளவு கரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. 

கரோனா வைரசை கட்டுக்குள் வைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு போன்றவை தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கரோனா வைரஸிற்கு தற்போது வரை 295 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 41 பேர் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், காசர்கோடு மருத்துவமனையில் கரோனா அறிகுறியுடன் அனுமதியாகியிருந்த நபர், பூரண நலன் பெற்று தனது இல்லத்திற்கு திரும்பும் முதல் நபராக அம்மருத்துவமனையில் இருந்து வெளியேறுகிறார். இதனையடுத்து மருத்துவர்கள் மற்றும் அங்கு காரோனா அறிகுறியுடன் அனுமதியாகியுள்ள நபர்கள் கைதட்டி ஆரவாரம் எழுப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In kerala Kasaragod hospital members send off treatment complete patient


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->