பள்ளி வகுப்பறையில் பாம்பு கடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த மாணவி விவகாரத்தில், நீதிபதிகள் குழு அதிரடி.!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பாத்தேரியிலுள்ள சர்வஜன அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது, இந்த பள்ளியில் 5ம் வகுப்பு படித்த வந்த மாணவி சேகலா ஷெரீன். 

இவர் கடந்த 20ம் தேதி வகுப்பறையில் அமர்ந்திருந்த போது, பாம்பு கடித்து உயிரிழந்தார். பள்ளியை சரியாக பராமரிக்காததே சிறுமியை பாம்பு அந்த பள்ளி நிர்வாகத்தின் புகார் எழுந்தது. மேலும் பாம்பு கடித்தவுடன் மருத்துவ சிகிச்சை கிடைக்காததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. 

இதை கண்டித்து பள்ளிக்கு எதிரே போராட்டம் நடைபெற்ற நிலையில், அந்தப்பள்ளியின் தலைமையாசிரியர், துணை தலைமையாசிரியர் மாநில அரசு இடைநீக்கம் செய்து அறிவித்திருந்தது. 

kerala child died snake bite,

இந்த பிரச்சனை இணையத்தளத்தில் வைரலாகி வந்த நிலையில்., மாணவிக்கு தகுந்த நேரத்தில் சிகிச்சையளிக்காத மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் விரைந்த நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் பள்ளியை சோதனை செய்தனர். 

இந்த சோதனையில் பள்ளியில் மாணவியின் வகுப்பறை எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் இருந்ததும்., கட்டிடத்தின் சுவர்களில் ஓட்டை மற்றும் துவாரங்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது.

மேலும்., இந்த கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 30 வருடங்கள் ஆகியது என்பதும் தெரியவந்ததை அடுத்து., கட்டிடத்தை முழுமையாக இடித்து அரசின் நிதியில் ரூ.2 கோடி செலவில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும்., மக்கள் அமைதி காக்கும் படியும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kerala girl died snake bite court judge investigate and report


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->