பைத்தியமாய் சாலையில் கல்லூரி மாணவி.. புத்தகப்பையில் பிஞ்சு குழந்தை சடலமாக....! இடுக்கியில் பேரதிர்ச்சி.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கேரள மாநிலத்தில் இருக்கும் இடுக்கி அருகேயுள்ள வாத்திக்குடி பகுதியைச் சார்ந்த 20 வயதுடைய மாணவி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கல்லூரியில் பயின்று வந்த நிலையில்., இவருடன் பயின்று வந்த ஒரு மாணவரை காதலித்து வந்துள்ளார். 

காதல் ஜோடிகள் இருவரும் அடிக்கடி வீட்டிற்கு தெரியாமல் தனிமையில் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் நிலையில்., அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த தருணத்தில்., மாணவி கர்ப்பம் ஆகியுள்ளார். 

இதனைத்தொடர்ந்து திடீரென மாணவி., "தனக்கு குழந்தை பிறந்து இருப்பதாகவும்., குழந்தையின் உடலை கல்லூரி பையில் வைத்து சுற்றித் திரிவதாகவும் தனது நெருங்கிய தோழிக்கு வாட்ஸ்அப் மூலமாக மெசேஜ் அனுப்பியுள்ளார். 

love,

இந்த செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்த தோழி., இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., அவரது புத்தகப்பை சோதனை செய்துள்ளனர். 

அந்த சமயத்தில்., அவரது பையில் குழந்தையின் சடலம் இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். பின்னர் மாணவியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மேற்கொண்ட விசாரணையில் மாணவி கர்ப்பம் தரித்து 6 மாதங்களில் ஆன நிலையில்., இதனை பெற்றோருக்கு தெரியாமல் பார்த்து வந்துள்ளார்.  

pregnancy,

தற்போது வீட்டின் குளியலறையில் குழந்தையை பெற்றெடுத்து., குறை பிரசவம் என்ற காரணத்தால் குழந்தை இறந்து பிறந்ததாகவும் பெண் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில்., இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் சடலத்தை பிளாஸ்டிக் கவரினால் சுற்றி மறைத்து வைத்துள்ளார்.  

இவரின் காதலனுக்கு மற்றொரு பெண்ணுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடந்துள்ளதாகவும்., திருமண நாளில் காதலன் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்தது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Kerala girl delivery baby after 6 months and died police investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->