சாரே இனி அந்த பெண் உண்ட மனைவி., பட்சே அவள் என் காதலியாக்கும்.!! நடிகர் செய்த காரியத்தால் பதறிப்போன மணமகன்.!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பாலோடு பகுதியை சார்ந்தவர் ஷான் (வயது 25)., இவர் அங்குள்ள மலையாள தொலைக்காட்சியில் இடம்பெற்று வரும் நிகழ்ச்சியில் நடித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சார்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கத்தின் மூலமாக அந்த பெண்ணிற்கு தொலைக்காட்சியில் நடிப்பதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக ஷான் கூறியதை அடுத்து., இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதை அடுத்து., இருவரும் காதலித்து வந்துள்ளனர். 

இந்த நேரத்தில்., இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இளம்பெண் ஷானை விட்டு விலக துவங்கியுள்ளார். மேலும்., ஷான் அவரை சந்திக்க முயற்சித்த போதும்., அவரை விட்டு விலக்கம் அடைந்துள்ளார். 

இந்த சூழ்நிலையில்., இளம்பெண்ணிற்கும் அதே பகுதியை சார்ந்த மற்றொரு ஆணிற்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டு இருந்துள்ளது. அந்த நபர் வெளிநாட்டில் பணியாற்றி வந்த நிலையில்., இந்த தகவலை ஷான் அறிந்து கொண்டுள்ளார். 

இதனையடுத்து அவரது வாழ்க்கையை சீரழிக்கும் எண்ணத்துடன் பெண்ணின் ஆபாச புகைப்படங்களை நிச்சயம் செய்யப்பட்ட மணமகனிற்கு அனுப்பி வைத்த நிலையில்., இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான மணமகன்., திருமணத்தை நிறுத்தியுள்ளார். 

இதனை அறிந்த பெண் வீட்டார் இது குறித்து கேட்கவே., அந்த மணமகன் விஷயம் குறித்து தெரிவித்துள்ளார். இதனை அறிந்த குடும்பத்தார் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது குறித்த வழக்குப்பதிவை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kerala girl boy friend release her affair videos in social media


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->