பள்ளிக்கு நேரமானதால் ஷூவை அணிய சென்ற சிறுமி.. காத்திருந்த பேரதிர்ச்சி.! பெற்றோர்களே உஷார்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் கரிக்ககோம் கோவில் பகுதியை சார்ந்த சிறுமி., அங்குள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதற்காக தனது காலனியை அணிய முயற்சித்துள்ளார். 

இந்த சமயத்தில்., காலணிக்குள் பாம்பொன்று நெளிவதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி., ஷூவை தூக்கி எறிந்துவிட்டு தாயாரிடம் பாம்பு... பாம்பு என்று அபயக்குரலிட்டுள்ளார். இதனை கேட்டு விரைந்த தாயார் சுதாரித்துக்கொண்டு., பாம்பு வீட்டிற்குள் தப்பி சென்றுவிட கூடாது என்று கருதி பாத்திரத்திற்கு உள்ளே ஷூவை வைத்துள்ளார். 

இதனையடுத்து அப்பகுதியை சார்ந்த பாம்பு பிடி நிபுணரான வாவாசுரேஷ் என்பவருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரிந்த சுரேஷ் ஷூவை வாங்கி பார்க்கையில் அதில் குட்டி நாகபாம்பொன்று இருந்துள்ளது. இதனையடுத்து ஷூவில் இருந்து பக்குவமாக வெளியே வரவழைத்து கையில் பிடித்த நிலையில்., பாம்பு துள்ளிக்கொண்டு இருந்துள்ளது.  

school, school going child,

பின்னர் பாம்பை டைல்ஸ் தரையில் விட்ட சமயத்தில்., பாம்பிற்கு டைல்ஸ் தரையில் செல்ல தெரியாமல் தத்தளித்ததை அடுத்து., பாம்பை பத்திரமாக பிடித்து அங்குள்ள காட்டுப்பகுதியில் சென்று விட்டுள்ளார். 

தற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில்., பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியர்கள் அல்லது காலணிகளை அணியும் அனைத்தும் நபர்களும் பாதுகாப்பாக காலணிகளை அணிய வேண்டும்... காலனிகளில் எளிதாக எலி., தேள்., பூரான் போன்ற உயிரினங்கள் தங்கிவிடும். நமது காலணிகளை உபயோகம் செய்யும் முன்னர் சுதாரித்து செய்லபடுவது நல்லது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kerala child wear shoe in snake video trending awareness


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->