நேற்று 10 மாவட்டம்., இன்று 8 மாவட்டம்..!! கேரளாவை புரட்டப்போகும் மழை., விடுக்கப்படும் எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கினாலும்., ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் முதலாகவே., தொடர்ந்து தீவிரமாக மழை பெய்து வருகிறது. மேலும்., கேரளாவில் பெய்த பலத்த மழையின் காரணமாக மலப்புரம்., வயநாடு போன்ற மாவட்டங்கள் கடுமையான அளவு பாதிக்கப்பட்டது. அங்குள்ள கவலப்பாறை மற்றும் புத்துமலை பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 100 க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக பலியாகினர். 

இதுமட்டுமல்லாது அங்கிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்த மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த தீவிர மழையானது ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில்., மழை சற்று குறைந்திருந்த நிலையில்., நிவாரண பணிகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில்., இந்த மாதத்தின் தொடக்கம் முதலாகவே மழையானது மீண்டும் தனது சுயரூபத்தை வெளிப்படுத்த துவங்கியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில்., மக்களின் இயல்பு வாழ்க்கையானது அடுத்தடுத்து பாதிக்க துவங்கியது. கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதியில் போக்குவரத்து அடுத்தடுத்து துண்டிக்கப்பட்டு முடங்கியது. 

kerala flood, kerala flood images, கேரள மழை வெள்ளம், கேரளாவில் மழை,

இந்த தருணத்தில்., வங்கக்கடல் பகுதியை ஒட்டியுள்ள கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களின் கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதாகவும்., இதன் காரணமாக கேரள மாநிலத்தில் வரும் 24 மணி நேரத்தில் கனமழை பெய்யலாம் என்றும் அறிவித்துள்ளது. மேலும்., கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம்., கோழிக்கோடு., திருச்சூர்., இடுக்கி., கண்ணூர்., மலப்புரம்., பாலக்காடு., காசர்கோடு மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

கனமழை காரணமாக கடலில் அலைகளின் சீற்றம் அதிகளவில் இருக்கும் என்றும்., கடற்கரையோர கிராமத்தில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியும்., மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். இந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தமிழகம்., புதுச்சேரி கடலோர பகுதியிலும் மிதமான மழை பெய்யலாம் என்றும் திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kerala 8 district yellow alert released


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->