இளம்பெண்ணிடம் பேருந்தில் அத்துமீறிய காமுக நடத்துனர்.. வெளியான பேரதிர்ச்சி வீடியோ பதிவு.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் நகரில் இருந்து மங்களூரு மாவட்டத்தில் உள்ள புத்தூரை நோக்கி அரசு பேருந்து பயணம் செய்து கொண்டு இருந்துள்ளது. இந்த பேருந்தில் பேருந்தின் நடத்துனர் பயணிகளுக்கு பயணசீட்டினை கொடுத்து வந்துள்ளார். 

பயணிகளுக்கு பயணசீட்டை கொடுத்த பின்னர், பேருந்தில் பயணம் செய்த இளம்பெண் அருகில் அமர்ந்துள்ளார். நடத்துனர் யதார்த்தமாக அமர்ந்ததால் இளம்பெண் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். 

இதனையடுத்து சிறிது நேரத்திலேயே நடத்துனர் இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லையை கொடுத்து வந்துள்ளான். மேலும், இந்த பெண் இதனை தடுக்க முயற்சித்தும், இதனை கண்டுகொள்ளாது, இளம்பெண்ணின் கைகளை தள்ளிவிட்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இந்த விஷயத்தை பெண்மணி அலைபேசியில் காணொளிகளாக பதிவு செய்த பின்னர், நடத்துனரிடம் சண்டையிடவே, தன் மீது எந்த தவறும் இல்லை என்று கூறி பேசியுள்ளான். தன்னிடம் உள்ள வீடியோ காட்சியை ஆதாரமாக காண்பிக்கவே, பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

இதனையயடுத்து இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகவே, கர்நாடக போக்குவரத்து துறையினரின் புகாரின் பேரில் காவல் துறையினர் நடத்துனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் பெரும் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Karnataka girl sexual torture govt bus conductor


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->