வீட்டில் வெட்டியாக இருந்த கணவன்.. கேள்வி கேட்ட மனைவிக்கு, சாகும் வரை தண்டனை அளித்த கொடூரம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் லட்சுமி சங்கரி. இவர் பெங்களூரில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், கேரள மாநிலத்தை சொந்தமாக கொண்டவர் ஐடின். இவர் சமையல் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், கடந்த சில வருடத்திற்கு முன்னதாக இருவரும் இரயிலில் ஒன்றாக பயணம் செய்துள்ளனர். 

இந்த நேரத்தில், இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தை அடுத்து, இருவரும் தங்களின் அலைபேசி எண்ணை பரிமாறிக்கொண்டு அவ்வப்போது அலைபேசியில் பேசி வந்துள்ளனர். இவர்களின் நட்பு பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து முடித்துள்ளனர். திருமணத்திற்கு பினர் ஐடின் மற்றும் லட்சுமி சங்கரி பெங்களூரில் உள்ள அட்சயா நகரில் தங்கி இருந்துள்ளனர். 

இவர்கள் இருவருக்கும் தவுஸினி என்ற மூன்று வயது குழந்தையும், சாஸ்தா குறி என்ற ஒன்றை வயதுடைய குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில தினமாகவே ஐடின் பணிக்கு செல்லாது வீட்டில் இருந்து வந்த நிலையில், பணிக்கு சென்று வரக்கூறி லட்சுமி கூறியுள்ளார். இதனால் இவர்களுக்குள் கடுமையான தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

நேற்று வழக்கம்போல சங்கரி பணிக்கு சென்றுவிடவே, ஐடின் தனது குழந்தைகளின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் இரண்டு குழந்தைகளும் மயக்கமடையவே, சாஸ்தா குரி பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளான். தவுஸினி உயிருக்கு போராடிய நிலையில், பணியை முடித்து வீட்டிற்கு வந்த தாய் உயிருக்கு போராடும் குழந்தையை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். இது தொடர்பாக ஐடினிடம் கேட்ட நேரத்தில், வேலைக்கு செல்ல வற்புறுத்தியதால் குழந்தையை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் தவுசினியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்த நிலையில், தவுசினியும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து ஐடிணை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Karnataka father killed their child


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->