நித்தி ஆசிரமத்தில் குஜராத் காவல்துறையினர் அதிரடி..! அடுத்தடுத்து வெளியாகும் தகவல்.!! - Seithipunal
Seithipunal


சர்ச்சைகள் நாயகன்., லீலைகள் மன்னன்., வைரல் விடியோவிற்கும் - அர்த்தங்கள் நிறைந்த ஆழமான... ஆழமான பேச்சிற்கு சொந்தக்காரன் என்ற பெருமையையும்., தியானம் முடியும் வரையில் சூரியனையே காத்திருக்க வைத்த நித்தியானந்த சுவாமிகள் அவ்வப்போது தனது இணையப்பக்கத்தில் விடியோவை வெளியிட்டு., பக்தகோடிகளுக்கு அருளாசி வழங்குவது வழக்கம்

இந்த நிலையில்., இவரின் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில்., பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கு விசாரணையும் நடைபெற்று வந்தது. கடந்த 2018 ஆம் வருடத்தின் போது பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கில் ஆஜரான நித்தியானந்தா., அதற்கு பிறகு ஆஜராகவே இல்லை. இதனால் இவர் எங்கே இருக்கிறார்? என்று தெரியாமல் அனைவரும் திக்கு முக்காடினார்.

மேலும்., இவர் காணாமல் போனதில் இருந்தே பலர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ளதாக தெரிவித்த நிலையில்., தனது வீடியோ காட்சியில் தான் எங்கும் செல்லவில்லை என்று தெரிவித்து கொண்டு வந்த நிலையில்., சமூக வலைத்தளங்கள் மூலமாக சிஷ்யர்களிடம் பேசி கொண்டு இருக்கிறார். 

nithyananda, nithyananda images, நித்யானந்தா,

ஈகுவாடோர் நாட்டிற்கு அருகில் இருக்கும் குட்டி தீவிற்கு 100 சிஷ்யைகளுடன் சென்றுவிட்டதாகவும்., இந்நாட்டை வாங்கியுள்ளதால் இதனை பரிபூரண இந்து நாடாக அறிவிப்பதாக இருக்கும் முயற்சியில் தற்போது உள்ளார் என்றும்., இதற்கு பெயராக கைலாஷ் நாடு என்று அறிவிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில்., கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்நகர் மாவட்டத்தில் இருக்கும் ஆசிரமத்தில் இருக்கும் தனது இரண்டு மகள்களை மீட்டு கொடுக்க கூறி குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜனார்த்தன சர்மா  என்பவர் ஆட்கொணர்வு மனு மற்றும் பாலியல் குற்றசாட்டிற்கான புகார் அளிக்கப்பட்ட நிலையில்., இது குறித்த விசாரணை நிறைவடைந்த பின்னர் குஜராத் காவல் துறையினர் ஆசிரமத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Karnataga Gujarat police investigate nithyanandha aasiram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->