வெளிநாட்டில் இருந்து தபாலில் வரும் போதைப்பொருள் பார்சல்.. அதிர்ச்சியில் காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு போதைப்பொருள் விற்பனை தொடர்பான இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில் நாகவாரா பகுதியை சார்ந்த விஜயராஜன் (வயது 58)., தேவாரசிக்கனஹள்ளி ரமேஷ்குமார் (வயது 47)., ஸ்ரீராமபுரம் பகுதியை சார்ந்த சுப்பு (வயது 34) மற்றும் ஆர்.டி.நகர் பகுதியை சார்ந்த மஜீத் அகமது (வயது 54) ஆகியோரை கைது செய்தனர். 

India post, தபால்,

இவர்கள் நால்வரும் தபால் ஊழியராக இருந்து வரும் நிலையில்., சாம்ராஜ்பேட்டையில் இருக்கும் தபால்நிலைய அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இந்த தபால் நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பார்சல்களை சரிபார்த்து விநியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

மேலும்., வெளிநாடுகளில் இருந்து பெங்களூருக்கு போலி முகவரி மூலமாக போதைப்பொருள் கடத்தல் கும்பல் அனுப்பும் பார்சல்களை அடையாளம் கண்டு., குறித்த பார்சல்களில் இருக்கும் போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். 

drugs, போதைப்பொருள்,

இது தொடர்பாக இவர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பை ஏற்படுத்தியதும்., வெளிநாடுகளில் இருந்து இவர்கள் போதை பொருட்களை இறக்குமதி செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. 

இவர்களுக்கு போதைப்பொருள் நெதர்லாந்து., டென்மார்க் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வந்ததும்., போதைப்பொருட்கள் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் திருடி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து தற்போது 339 போதை மாத்திரைகள்., 10 கிராம் அளவிலான எம்.டி.எம்.ஏ போதைப்பொருள்., 30 கிராம் பிரவுன் சுகர் கைப்பற்றப்பட்டுள்ளது. இவரின் மதிப்பு ரூ.20 இலட்சம் ஆகும். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Karnadaga post form foreign sales drugs police arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->