மகாராஷ்டிரா - கர்நாடக எல்லையில் பதற்றம்..! குவிக்கப்படும் காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா - கர்நாடக மாநில எல்லையில் பெலக்காவி மாவட்டம் உள்ளது. பெலகாவி மாவட்டத்தினை பொறுத்த வரையில் பெரும்பாலான மக்கள் மராட்டிய மொழி பேசி வருகின்றனர். இதன் காரணமாக பெலகாவியில் இருக்கும் கிராமங்களை மகாராஷ்டிரா மாநிலத்துடன் சேர்க்க வேண்டும் என்ற பிரச்சனையும்., எங்களின் மாநிலத்துடன் தான் பெலகாவி இருக்க வேண்டும் என்ற எல்லை பிரச்சனை இருந்து வந்துள்ளது. 

இது தொடர்பான வழக்கு விசாரணையும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில்., மராட்டிய மொழி பேசும் 800 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பெலகாவி மாவட்டத்தில் இருக்கிறது. இக்கிராமத்தை மகாராஷ்டிராவுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க கூறி மகாராஷ்டிரா ஏகிகரண் சமிதி அமைப்பை சார்ந்த நபர்கள் மகாராஷ்டிரா அரசிடம் மனுவினை கொடுத்தனர். 

இதனையடுத்து மகாராஷ்டிரா அரசின் சார்பாக ஒருங்கிணைப்பாளர்கள் அமைத்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்ததால் மீண்டும் அங்குள்ள பகுதிகளில் எல்லை பிரச்சனை வெடித்துள்ளது. இந்த விசயத்திற்கு கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் பெரும் பிரச்சனை ஆரம்பித்துள்ளது. மேலும்., கர்நாடக பகுதிகளை மகாராஷ்டிரா மாநிலத்துடன் இணைக்க கூறியிருக்கும் சமிதி அமைப்பு தலைவரை எல்லையில் வைத்து சுட்டு கொலை செய்ய வேண்டும் என்று கர்நாடக நவநிர்மாண் சேனா தலைவர் பீமாசங்கர் பேசியிருந்தார்.  

இந்த விசயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு அங்குள்ள கோலாப்பூரில் சிவசேனா கட்சியினை சார்ந்த நபர்கள் ஊர்வலம் நடத்தவே., இதன் போது கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. மேலும்., கோலாப்பூரில் இருக்கும் திரையரங்களில் திரையான கன்னட படங்கள் நிறுத்தப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து கர்நாடக அமைப்பின் மூலமாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள பகுதிகளில் பெலகாவி - கோலாப்பூர் மாவட்டங்களில் பதற்றம் நிலை வருவதால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும்., மகாராஷ்டிரா - கர்நாடக பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karnadaga maharastra border problem peoples panic


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->