அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் நோயாளிகளுக்கு ஊசி போடும் சோகம்.! அலட்சியத்துடன் மருத்துவமனை நிர்வாகம்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டத்தில் இருக்கும் கொரட்டகெரே சட்டமன்ற தொகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள்., செவிலியர்களை போலவே நோயாளிகளுக்கு ஊசி போடுவது மற்றும் குளுக்கோஸ் ஏற்றுவது போன்ற செயல்களை செய்து வருவதாக புகார்கள் வந்தது. 

அந்த அரசு மருத்துவமனையில் சுமார் 300 க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில் அறுவை சிகிச்சை பிரிவு., மகப்பேறு பிரிவு போன்ற பல்வேறு தீவிர சிகிச்சை பிரிவுகளும்., புற நோயாளிகள் பிரிவுகளும் உள்ளது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்., மருத்துவமனை ஊழியர்கள் உள்ளனர். 

இந்த மருத்துவமனைக்கு தினமும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் புற நோயாளிகளாக வந்து செல்லும் நிலையில்., மருத்துவமனையில் இருக்கும் உள் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் ஊசி போடுவது மற்றும் குளுக்கோஸ் ஏற்றுவது போன்ற வீடியோ காட்சிகளானது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இது குறித்து அங்குள்ள மக்களிடம் கேட்டதற்கு., மருத்துவமனையில் தேவையான மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் இருந்தும் அவர்களின் பணியை சரிவர செய்வதில்லை. இது குறித்து அவர்களிடம் கேட்டால் செவிலியர் பற்றாக்குறை என்று கூறுகின்றனர். மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண்களுக்கு ஊசி போட பயிற்சியளித்து அவர்களை பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கின்றனர். இது குறித்த அதிரடி நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karnadaga govt hospital cleaning men inject a injunction for patients


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->