பெண் துறவியை துண்டுதுண்டாக வெட்டி கொலை.. பாலியல் வன்கொடுமை அக்கிரமமா?..! கர்நாடகாவில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள கதக் மாவட்டத்தை சார்ந்தவர் கிருசாந்தப்பா. இவரது மனைவியின் பெயர் கோசு மரியா. இந்த தம்பதிக்கு நான்கு பிள்ளைகள் இருந்த நிலையில்., இவரது இரண்டாவது மகளின் பெயர் மேரி சென்ட்ரா (வயது 26). 

கிருத்துவ மதத்தினை சார்ந்த குருசாந்தாபா மற்றும் கோசு மரியா ஆகியோர் சேர்ந்து மேரி சான்ராவை மைசூரில் இருக்கும் கிருத்துவ பெண்கள் துறவிகள் அமைப்பில் சேர்த்துள்ள நிலையில்., பெண் துறவியாக பயின்று வந்த மேரி சாண்ட்ரா கிறிஸ்துவ மத போதனை செய்து வந்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து அங்குள்ள கலபுராகி., பெலகாவி., கதக் மற்றும் மைசூரில் மாவட்டங்களில் கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சொந்தமாக உள்ள பள்ளிகளில் பணியாற்றி வந்த நிலையில்., இறுதியாக உப்பள்ளியில் இருக்கும் பேராலயத்தில் போதகராகவும்., செயின்ட் மேரி பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வந்துள்ளார். 

died, murder, killed, suicide attempt,

இந்த தருணத்தில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அவர் மாயமான நிலையில்., இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு., இது குறித்த வழக்குப்பதிவை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில்., நேற்று மேரி அங்குள்ள உப்பள்ளி இரயில் நிலையத்திற்கு அருகேயுள்ள தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு இருந்துள்ளார். மேலும்., இவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து வீசியுள்ளனர். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து., மேரி எதற்க்காக? கொலை செய்யப்பட்டார் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karnadaga girl killed police investigation going on


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->