ஆன்மீக சுற்றுலாவில் நித்தி... நேரில் சந்தித்து சம்மன் கொடுக்க கூறிய உத்தரவில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த நித்யானந்தா பெங்களூரை அடுத்துள்ள பிடதி பகுதியில் நித்தியானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வந்தார். இவரின் சொற்பழிவை கேட்ட கோடான கோடி பக்தர்கள் மற்றும் பக்தைகள் ஆதரவு பெருகவே, இவரின் கிளைகளும் இந்தியா முழுவதும் செயல்பட துவங்கியது. இவருக்கு இந்தியாவில் உள்ள பக்தர்கள் மற்றும் பக்தைகளை போலவே வெளிநாட்டு ஆதரவும் பெருகியது. இவரது செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது என்று எண்ணியிருந்த நிலையில், பகீரென நடிகை ரஞ்சிதாவுடன் குதூகலமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. 

இந்த வீடியோ உண்மை இல்லை என்று இன்று வரை இரட்டை கால்களில் அமர்ந்து சமாளித்து வரும் நிலையில், அவ்வப்போது பல சர்ச்சை பேச்சுகளும் பேசி இணையதள நெட்டிசன்களிடம் குட்டு வாங்கி சென்றார். இவரை ஒரு குணசித்திர காமெடி நடிகராக இணையத்தளத்தில் உருவாக்கி நெட்டிசன்கள் விளையாடி வந்த நிலையில், பெரும் அதிர்ச்சியாக குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை புகார்கள் எழத்துவங்கியது. இது தொடர்பாக புகார்கள் அடுத்தடுத்து தொடர்ந்து எழவே, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். அனைவருக்கும் டிமிக்கி கொடுத்து அவ்வப்போது இணையத்தளம் மூலமாக சீடர்களிடையே உரையாற்றி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே நித்யானந்தா சிஷ்யர்களுடன் வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக பேசப்பட்டது. 

இந்த கூற்றுகளை அவ்வப்போது பதிவிடும் வீடியோ காட்சிகளில் மறுப்பு தெரிவித்து தூணிலும் இருக்கிறேன்., துரும்பிலும் இருக்கேன் என்று சமாளித்து வந்த நிலையில், கைலாஸா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக தெரியவந்தது. பின்னர் வெளியான தகவலின் படி இப்படியொரு நாடு இல்லை என்றும், அகதியாக சொகுசு கப்பலில் நித்தியானந்தா உல்லாசகமாக இருந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், நித்தியை கைது செய்ய புளூ கார்னர் சம்மனும் பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை தற்போது தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், நித்தியானந்தா ஆன்மீக சுற்றுலாவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. நித்தியானந்தா மீதான பாலியல் வன்கொடுமை புகார் ஜாமின் மனு தொடர்பான விவகாரத்தில் நித்தியானந்தாவை நேரில் சந்தித்து சம்மன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை செய்து வரும் காவல்துறை துணை கண்காணிப்பாளர், நித்தியானந்தாவின் சம்மன் அவரது உதவியாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர் பிடதி ஆசிரமத்தில் இல்லை என்றும், ஆன்மீக சுற்றுலா பயணம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karnadaga court sampan answer by investigation DIG


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->