இரண்டு மணி நேரம் மருத்துவமனையில் அலறித்துடித்த கர்ப்பிணி.! மருத்துவரின் அலட்சியத்தால் இறுதியில் நேர்ந்த துயரம்.!!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கவயல் அரசு மருத்துவமனையில்., அங்குள்ள ராபர்ட்சன்பேட்டை பகுதியைச் சார்ந்த ரியாஸ் என்பவரின் மனைவியான சமீனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில்., நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

அந்த சமயத்தில்., அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஸ்கேன் செய்து வர கூறியுள்ளனர். இதனைக் கேட்டு இருவரும் ஸ்கேன் செய்யச் சென்ற நிலையில்., ஸ்கேன் எடுத்து விட்டு மருத்துவமனைக்கு வந்த சமயத்தில்., அவர்களிடம் மருத்துவர்கள் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. 

மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் சுமார் 2 மணி நேரம் வரண்டாவில் பிரசவ வலியால் அலறி துடித்த நிலையில்., இரண்டு மணி நேரம் கழித்து மருத்துவமனைக்கு வந்த தலைமை மருத்துவர்., அவர்களை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். 

அந்த நேரத்தில்., இவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் அவருக்கு குழந்தை இறந்ததாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரியாஸ் மற்றும் அவரது மனைவி கதறியழுத நிலையில்., மருத்துவரின் அலட்சியத்தால் தனது குழந்தை இறந்துவிட்டதாக கூறி தக்க நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். 

இதுபற்றி தகவல் அறிந்த கர்நாடக மாநில பெண்கள் மற்றும் குடும்ப நலத் துறைச் செயலாளர்., இது குறித்த விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில்., மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் ஊழியர்கள் என அனைவரும் தகுந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும்., இதுபோன்ற சம்பவங்கள் வரும் நாட்களில் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இது தொடர்பான வீடியோ பதிவானது இணையத்தில் வைரலாகும் நிலையில்., இந்த பிரச்சனை தற்போது வெளிவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karnadaga a pregnant lady baby died and born due to doctors activity


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->