தந்தைக்கும் - மகனுக்கும் ஒரே மணமேடையில் திருமணம்... வினோதத்தின் பின்னணியில் சுவாரசியம்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள குல்மா மாவட்டத்தில் இருக்கும் கக்ரா பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான நபர்கள் திருமணம் முடித்துக்கொள்ளாமலேயே, தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில், இக்கிராமத்தை சார்ந்த ராம்லால் - ஷாக்கோரி தம்பதி கடந்த 30 வருடத்திற்கும் மேலாக திருமணம் செய்து கொள்ளாது குடும்பம் நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஜித்தீஷ் என்ற மகன் உள்ளார். 

இவரது மகனான ஜித்தீஷும் திருமணம் செய்து கொள்ளாமலேயே அருணா என்ற பெண்மணியுடன் வாழ்ந்து வரும் நிலையில், இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. இந்த கிராமத்தின் நிலையை எண்ணி சில தொண்டு நிறுவனங்கள் செலவில் திருமணம் செய்து வைத்து கொண்டு இருக்கின்றனர். 

இதன்படி ஜித்தீஷ் - அருணா தம்பதிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்த நிலையில், இவர்கள் விருப்பப்படி ஜித்தீஷின் தாய் - தந்தையருக்கு ஒரே மணமேடையில் திருமணம் செய்து வைத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Jharkand father mother and son couple marriage


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->