அத்துமீறிய பாகிஸ்தான் இராணுவம்.. பதிலடி கொடுத்து ஓடவிட்டு இந்திய இராணுவம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டதால் இருந்து, பாகிஸ்தான் - இந்திய எல்லைப்பகுதி பதற்றமான நிலையில் இருந்து வருகிறது. பாகிஸ்தான் இராணுவத்தினர் எல்லையில் அத்துமீறி, இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், இந்திய பாதுகாப்பு படையினரும் இரவு - பகல் பாராது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலமாக பாகிஸ்தான் நாட்டில் உள்ள பயங்கரவாத இயக்கத்தின் பல தாக்குதல்கள் எல்லையியேயே முறியடிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இந்த தருணத்தில், காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் இருக்கும் தேக்குவார் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி அருகே கடந்த 8 ஆம் தேதியன்று பாகிஸ்தான் இராணுவத்தினர், அத்துமீறிய தாக்குதலை அரங்கேற்றினர். 

indian army, india,

இது மட்டுமல்லாது துப்பாக்கிசூடு மற்றும் சிறிய இரக பீரங்கி தாக்குதலின் மூலமாக இந்திய எல்லையில் அத்துமீறல் ஊடுருவ முயற்சி செய்து வந்தனர். இந்த முயற்சியை தடுக்க இந்திய இராணுவம் சார்பாக பதில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. 

இந்த தாக்குதல் இந்திய இராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். மேலும், 3 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த நேரத்தில், இதனைப்போன்று அங்குள்ள மெந்தார் பகுதியில் இந்திய இராணுவம் இன்று மேற்கொண்ட தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த 3 நாட்களாகவே துப்பாக்கிசூடு நடந்து வருவதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in jammu kashmir pakistan illegal attack take end card by indian army


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->