ஜம்மு காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல்... இரண்டு இராணுவ ஊழியர்கள் பரிதாப பலி. தொடரும் பதற்றம்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து பெரும் பிரச்சனை நடந்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் எல்லை பிரச்சனையில் ஜம்மு - காஷ்மீரை மையாக வைத்த பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. 

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளும் இந்தியாவில் தாக்குதலை மேற்கொள்ள பல திட்டத்துடன் எல்லையில் அத்துமீறி நுழைந்து வருவதும்., பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கையும் தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில்., ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கொடு பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில்., இந்திய இராணுவத்தில் சுமை தூக்கும் ஊழியர்கள் 2 பேர் பரிதமாக பலியாகினர். 

அங்குள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குல்புரில் இருக்கும் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டையை ஒட்டிய பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று காலை சுமார் 11 மணிமுதல் சிறிய ரகத்தினால் ஆன பீரங்கியை கொண்டு தாக்குதலை மேற்கொண்டு வந்தனர். 

இந்த தாக்குதலின் போது இந்திய இராணுவத்தில் சுமை தூக்கும் ஊழியராக பணியாற்றி வந்த 2 பேர் பரிதாபமாக பலியான நிலையில்., 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு இந்திய இராணுவம் சார்பாக பதிலடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில்., எல்லையில் பதற்றம் தொடர்ந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in jammu Kashmir border Pakistan army attack peoples died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->