கள்ளகாதலியுடன் தியேட்டருக்கு போன கணவனை புரட்டி எடுத்த மனைவி.! வெளியான வைரல் வீடியோ பதிவு.!!  - Seithipunal
Seithipunal


முறையற்ற உறவு பிரச்சனை மற்றும் கள்ளக்காதல் தொடர்பான பிரச்சனைகள் இன்றளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல உயிரிழப்புகளும் தொடர்ந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் அருகேயுள்ள கஜ்ரானா பகுதியில் இரண்டு பெண்கள் ஆவேசமாக சண்டையிட்டு கொண்டு இருந்தனர். இந்த பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் எதற்காக? இருவரும் சண்டையிட்டுளள்னர் என்று தெரியாமல் இருந்துள்ளனர். 

இந்த சமயத்தில்., இது குறித்த பொதுமக்களின் விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தினால் சண்டை நடப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் எந்த விதமான சமாதானமும் செய்ய முற்படாமல்., அமைதியாக சண்டையை வேடிக்கை பார்த்தனர். 

இது குறித்த சம்பவத்தில்., தனது கணவனின் மீது சந்தேகம் கொண்ட மனைவி., கணவர் திரையரங்கிற்கு செல்வதை அறிந்து., அவருக்கு தெரியாமலேயே பின் தொடர்ந்து வந்த நிலையில்., மனைவி சந்தேகப்பட்டதை உறுதி செய்யும் வகையில் மற்றொரு பெண்ணுடன் திரையரங்கிற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து இரண்டு பெண்களும் அரை மணிநேரம் அடித்து உருண்ட நிலையில்., இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணிநேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Indore girl attack her husband and husband illegal affair girl


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->