மணமேடையில் அமர்ந்து மணமகன் செய்த வேலை.! ஆத்திரமடைந்து உறவினர்கள் கேட்ட ஒரு கேள்வியால் மனமுடைந்த மாப்பிள்ளை.!! - Seithipunal
Seithipunal


இணையதள விளையாட்டுகளில் பலவிதமான விளையாட்டுகள் உள்ளது. அவ்வாறு உள்ள இணையதள விளையாட்டுகளை தனியாக விளையாடி மகிழ்ந்து வந்த நமக்கு., நமது நண்பர்களுடன் விளையாட வேண்டும் என்ற ஆவலும் இருந்து வந்தது. இந்த ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் இருந்த சில விளையாட்டுகளில் தேவையான மகிழ்ச்சி கிடைத்து பின்னர் சலிப்படைந்து. 

இந்த இணைய விளையாட்டை வெறித்தனத்திற்குள் கொண்டு செல்வதற்கும்., நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி கொண்டாடுவதற்கும்., மகிழ்விப்பதற்கும் பப்ஜி செயலியானது உருவாக்கப்பட்டு பதிவேற்றப்பட்டது. இந்த செயலி இந்தியாவில் களமிறங்கிய நாட்கள் முதலாகவே பல்வேறு விளையாட்டுகளை விளையாடி கொண்டு இருந்த பெரும்பாலானோர் தற்போது இந்த செயலியில் தனது நண்பர்களுடன் குழுவாக சேர்ந்து சிக்கன் டின்னர் என்ற வெற்றி வாகை சூடுகின்றனர்.

இந்த செயலில் பல தீமைகள் ஏற்பட்டுள்ளதையும் நாம் அறிந்திருக்கும் இந்த நேரத்தில்., பலர் எந்த நேரத்திலும் இந்த விளையாட்டை விளையாண்டபடியே உள்ளார்கள். இதன் காரணமாக இந்த விளையாட்டிற்கு பலர் அடிமையானதை தொடர்ந்து இந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று புகார்கள் எழுந்து வரும் நிலையில்., சுமார் 6 மணி நேரம் மட்டுமே இந்த விளையாட்டை விளையாடும் படி மாற்றம் செய்யப்பட்டது. 

இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டாலும் இந்த விளையாட்டை விளையாடும் நபர்கள் இது குறித்த எச்சரிக்கையால் ஒன்றும் இல்லை., எச்சரிக்கை குறுஞ்செய்தி வரும் அதனை சரி என்று கொடுத்துவிட்டால் மீண்டும் விளையாடலாம் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்., மணமேடையில் மணமகன் பப்ஜி விளையாட்டை விளையாடிக்கொண்டு இருக்கும் காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த செயலை கண்ட உறவினர்கள் பெரும் சோகத்தில் மூழ்ங்கியிருந்த நிலையில்., அவர்கள் கொடுக்க வந்த பரிசுகளை கூட கண்டுகொள்ளாது மணமகன் விளையாட்டிலேயே குறிக்கோளாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., இதனை கண்ட உறவினர்கள் மாப்பிள்ளை எந்த நேரமும் இதே போன்றுதான் இருப்பாரா? என்று மறைமுக கேள்வியையும் முன்வைத்த வண்ணம் உள்ளனர்.     


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Indian marriage festival married man playing pubg game


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->