அடுத்தடுத்து மருத்துவமனையில் அட்மிட் ஆன நீதிபதிகள்... மருத்துவ பரிசோதனையில் பகீர்.!! எடுக்கப்பட்ட நடவடிக்கை..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தலைமை நீதிமன்றமாக டெல்லி உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் பல்வேறு முக்கிய வழக்குகள் மேல்முறையீட்டிற்காகவும், பிற பிரச்னைகளுக்காகவும் காத்துக்கொண்டு இருக்கிறது. 

இந்த நீதிமன்றத்தில் பல்வேறு நீதிபதிகள் பணியாற்றி வரும் நிலையில், சுமார் 6 நீதிபதிகள் அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். 

இவர்களிடம் மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், இவர்கள் அனைவருக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து நீதிபதிகளுக்கு தேவையான சிகிச்சையை மருத்துவர்கள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக தலைமை நீதிபதியான எஸ்.ஏ.பாப்டேவிடம் சக நீதிபதியான சந்திர சூட் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பான கோரிக்கையில், 6 நீதிபதிகள் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற ஊழியர்களுக்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறினார். இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற பகுதியில் தற்காலிக மருத்துவமனை அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in india supreme court judges affected swine flu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->