இந்தியாவிலேயே முதல் தீர்ப்பு... நீதிபதிக்கு பாராட்டு தெரிவிக்கும் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக சட்டங்கள் இருக்கும் பட்சத்திலும்., சில மாநிலங்களில் சில சட்டங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்., தமிழகத்தை பொறுத்த வரையில் விபசாரம் என்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டாலும்., சில மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் அனுமதியுடன் நடைபெற்று வருகிறது. 

இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மித்னாப்பூர் மாவட்டத்தில் இருக்கும் விபசார விடுதியில் சென்றதற்கு ஆட்கடத்தல் மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மூன்று வருட சிறைத்தண்டனை விதித்து., அங்குள்ள ஹல்தியா நீதிமன்றம் தீர்ப்பளித்தது இந்தியாவிலேயே முதல் முறையாக அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

prostitution, sexual harassment, sexual abuse, sexual torture,

மேலும்., குறித்த விபச்சார விடுதியை நடத்தி வந்த பச்சா மற்றும் விடுதியின் மேலாளர் சஹாதேவ் ஆகியோருக்கு சுமார் 10 வருட சிறை தண்டனையையும் ரூ.47 ஆயிரம் அபராதமும்., விபச்சார விடுதியில் பணியாற்றிய 5 ஊழியர்களுக்கு 7 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த விபச்சார விடுதிகளுக்கு சென்றதற்காக பிரென்., கொக்கோன் மொண்டால் மற்றும் பிபிதாஸ் ஆகிய மூவருக்கும் மூன்று வருட சிறை தண்டனையானது விதிக்கப்பட்டு உள்ளது. மேலும்., இது தொடர்பான விசாரணையில் விபச்சாரத்திற்கு வலுக்கட்டாயமாக உட்படுத்துவது குற்ற செயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in india first judgement released prostitution case


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->