இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.. இந்திய சுகாதாரத்துறை..!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் சுமார் 199 நாடுகளுக்கு பரவியுள்ள கரோனா வைரஸின் தாக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டும், பலியாகியும் வருகின்றனர். 

இதனால் உலக நாடுகள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு தேவையான நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், உலகளவில் தற்போது வரை 532,119 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24,083 பேர் பலியாகியுள்ளனர். 

கரோனா வைரஸின் தாக்கத்திற்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அமெரிக்காவில் ஒரேநாளில் 17,224 அதிகரித்து, மொத்தமாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 85,435 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 47 பேர் வெளிநாட்டினர் ஆவார்கள். மேலும், தற்போது வரை 17 பேர் பலியாகியுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 130 பேர் பாதிக்கபட்டுள்ளதாகவும், கேரளா மாநிலத்தில் 137 பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கர்நாடக மாநிலத்தில் 55 பேர் பாதிக்கப்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in India corona virus symptoms person


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->