10 ல் 8 குழந்தைகள் வாய்வழி சுகாதார பிரச்சனையால் பாதிப்பு..! எங்கு அதிக பாதிப்பு தெரியுமா?.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள 12 நகரில் இருக்கும் பல்வேறு சமூக பின்னணியை சார்ந்த சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெரியவர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் தனியார் தன்னாய்வு நிறுவனமானது ஆரோக்கியம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டது. 

இந்த ஆய்வில்., இந்தியாவில் உள்ள டெல்லி., சண்டிகர்., மும்பை., லக்னோ., ஹைதராபாத்., அகமதாபாத்., கொல்கத்தா., புனே., சென்னை., புவனேஸ்வர் மற்றும் பாட்னா., கொல்கத்தா போன்ற நகரில் முகாம்கள் அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த ஆய்வை மேற்கொண்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர்., குழந்தைகளிடம் வாய்வழி சுகாதார பிரச்சனைகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும்., பற்களில் வெள்ளை புள்ளிகள் மற்றும் ஈறுகளில் வீக்கம்., ஈறுகளில் இரத்தம் போன்ற பிரச்சனைகளை கணக்கெடுத்துள்ளனர். 

health,

இந்த ஆய்வில் கணக்கெடுக்கப்பட்ட அறிக்கையின் படி., சுமார் 3 குழந்தைகளில் இரண்டு குழந்தைகளுக்கு துவாரங்கள் உள்ளதாகவும்., 10 குழந்தைகளில் 9 குழந்தைகள் வாய்வழியான உடல்நல பிரச்சனைக்கு ஆட்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாய்வழி சுகாதார பிரச்சனையில் இந்தியாவின் கிழக்கு மண்டலத்தில் 89 விழுக்காடு அளவிற்கான பாதிப்பும்., மேற்கு இந்தியாவில் 88 விழுக்காடு அளவில் பாதிப்பும்., வட இந்திய பகுதியில் 85 விழுக்காடு பாதிப்பும்., தென்னிந்தியாவை பொறுத்த வரையில் 64 விழுக்காடு அளவிற்கும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும்., இந்த ஆய்வின் முடிவில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான குழந்தைகளின் வாய்வழி சுகாதார பிரச்சனைக்கு., நாளொன்றுக்கு இரண்டு முறை பல் துலக்காத பிரச்சனை இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. சுமார் 70 விழுக்காடு அளவில் உள்ள குழந்தைகள் இரண்டு வேலை பல் துலக்குவதில்லை என்றும்., 60 விழுக்காடு அளவிலான குழந்தைகள் பாதிப்படைந்தும்., மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படாமல் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in India babies affected teeth type diseases


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->