ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் வரை வரதட்சணை கொடுத்து பெண்களை திருமணம் முடிக்கும் இளைஞர்கள்..!! எந்த மாநிலத்தில் தெரியுமா?..!! - Seithipunal
Seithipunal


இந்தியா என்கிற தேசத்தின் உயிர் நாடியாக அனைவரும் போற்றும் தெய்வம் இந்திய தேவி... பூமியை படைத்த பூமா தேவியை போற்றி வணங்கும் நாடு என்ற பெருமையையும்., பெண் தெய்வங்களை போற்றி வழிபடும் திருநாடகவும் இந்தியா திகழ்ந்து வருகிறது. பெண்களை போற்றி வணங்கி வரும் வேளையில்., பெண்களுக்கு எதிரான அநீதிகளும் தொடர்ந்து வருகிறது. 

அமைதிக்கு எடுத்துக்காட்டாக பல தெய்வங்களும் உள்ள நிலையில்., ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் பத்ரகாளியாகவும் மக்களுக்கு காட்சி தந்து., தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மை செய்கிறாள். இந்த நிலையில்., பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளில்., பெண் குழந்தைகளின் மரணமும் ஒன்றாக உள்ளது. 

பெண் சிசு கொலைகள் என்பது அன்றைய காலங்களில் அதிகளவு இருந்த நிலையில்., இதனை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. சிசு கொலைகள் குறித்து என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும்., பல இடங்களில் பெண் சிசு கொலைகள் என்பது இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில்., திருமணத்திற்கு பெண்கள் இல்லாமல் அண்டை மாநிலத்தில் பெண்களை விலைக்கு வாங்கும் நிலையில் உள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. 

marriage, wedding, indian marriage, south indian marriage,

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் கடந்த 1980 ஆம் வருடங்கள் மற்றும் 1990 ஆம் வருடத்தில் நடைபெற்ற பெண் சிசு கொலைகளின் காரணமாக., இன்றுள்ள இளைஞர்களுக்கு திருமணம் முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும்., இதனை சரி செய்வதற்கு பெண்களை தேடி கண்டறிந்து படிப்பு மற்றும் குடும்பத்தின் சூழ்நிலை மற்றும் அழகு போன்றவற்றிருக்கு ஏற்றார் போல பணம் கொடுத்து., திருமணம் செய்யும் சூழலும் ஏற்பட்டுள்ளது. 

அந்த வகையில்., ரூ.35 ஆயிரம் முதல் ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் வரை பெண் வீட்டாருக்கு பணம் கொடுத்து., பெண்ணை திருமணத்திற்க்காக தயார் செய்து திருமணம் செய்து கொள்கின்றனர். மேலும்., இந்த விஷயத்தில் பணக்கார ஆண்களின் வாழ்க்கை துவங்கினாலும்., ஏழ்மையில் இருக்கும் ஆண்களுக்கு பெண்கள் கிடைக்காமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதன் காரணமாக அங்குள்ள இளைஞர்களுக்கு ஹரியானா., பீகார்., அசாம்., மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா., உத்திரகாண்ட் மற்றும் உத்திரபிரதேசம்., ஆந்திர பிரதேசம்., ஹிமாச்சல் பிரதேசம்., ஜார்கண்ட் மற்றும் ஒடிசா., மத்திய பிரதேசம் மற்றும் நேபாள பகுதிகளில் இருந்து ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த பெண்களை வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in hariyana state youngster giving money for girls home and marry her


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->