ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுமி பலியான விவகாரம்.! எம்.எல்.ஏவின் பேச்சால் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் மணப்பாறையை அடுத்துள்ள நடுகாட்டுப்பட்டி பகுதியை சார்ந்த இரண்டு வயது சுர்ஜித் என்ற குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். 80 மணிநேரத்துக்கும் மேலான தொடர் மீட்புப்பணிகள், பலதரப்பட்ட முயற்சிகள் என அனைத்து விதமான முயற்சியும் இறுதி சமயத்தில் தோல்வியை தழுவ இறந்த நிலையில், மக்களை தவிக்க வைத்து இறந்தான். 

இதனைத்தொடர்ந்து திறந்திருக்கும் ஆழ்துளைக்கிணறுகளை சரியான முறையில் மூடுவதற்கு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், ஹரியானா மாநிலத்தில் இதனைப்போன்ற துயர் அரங்கேறியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹர்சிங் புரா கிராமத்தில் வசித்து வரும் 5 வயதுடைய சிறுமி நேற்று எதிர்பாராத விதமாக திறந்திருந்த ஆழ்துளைக்கிணற்றில் விழுந்துள்ளார். 

சிறுமி சுமார் 50 அடி ஆழத்தில் விழுந்த நிலையில்., தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் ஏறக்குறைய 10 மணிநேரத்துக்குப் பின், பக்கவாட்டில் குழி அமைத்து., அந்தச் சிறுமியை பத்திரமாக மீட்டனர். மிகவும் பலவீனமான இருந்த சிறுமியை உடனடியாக அங்கு இருந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஆனால், மருத்துவமனையில் சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த பெற்றோர்கள் கதறியழுதது., அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் மீட்பு படையினர் சிறப்புடன் செயல்பட்டு சிறுமியை மீட்டிருந்தாலும்., குழந்தையின் பெற்றோர்கள் கவனக்குறைவின் காரணமாக சிறுமி உயிரிழந்துள்ளதாக அப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கல்யாண் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in hariyana child died in bore well MLA complaint rises her parents


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->