இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தயாராகும் பாகிஸ்தான் சிறப்பு இராணுவ குழு..! உச்சகட்ட கண்காணிப்பில் இந்தியா..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் இருக்கும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தினை., இந்திய அரசு இரத்து செய்ததற்கு பாகிஸ்தான் தரப்பில் கடுமையான எதிர்ப்பானது தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்., காஷ்மீர் விவகாரம் குறித்து ஐநா சபையில் விவாதம் செய்ய வேண்டும் என்று கூறி., பாகிஸ்தான் தரப்பில் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவியது. 

இந்த நிலையில்., இந்த தோல்விக்கு பின்னர் சர்வதேச போர் நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி., எல்லைப்பகுதியில் இருக்கும் இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்திக்கொண்டு வருகிறது. இதுமட்டுமல்லாது பாகிஸ்தான் நாட்டின் இராணுவ சிறப்பு குழு மற்றும் பயங்கரவாதிகள் ஒன்று சேர்ந்து கடல் வழியாக படகுகள் மூலமாக இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கு வந்து., தாக்குதல் நடந்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை கூறியுள்ளது. 

மேலும்., இலங்கை தாக்குதலுக்கும் முன்னதாக இந்திய உளவுத்துறை சார்பில்., இலங்கைக்கு பிரேத்தியேக ரகசிய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில்., இதனை கண்டு கொள்ளாத காரணத்தால்., அரங்கேறிய சோகமும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதனைத்தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு ஏற்கனவே பிரத்தியேக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

                                                    பாகிஸ்தான் சிறப்பு இராணுவ குழு.... 

இந்த நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிரவாதிகளுக்கு தொடர்புடைய ஆட்களை கைது செய்ததும்., கோயம்புத்தூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் என பெரும்பாலான இடங்களுக்கு காவல் துறையினர் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கியது தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகிறது. 

இதனைப்போன்று உளவுத்துறையின் தற்போதைய எச்சரிக்கையின் படி குஜராத் கடற்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பானது ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கடற்படை காவல் துறையினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் சேர்ந்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும்., பாகிஸ்தான் நாட்டின் இராணுவ சிறப்பு சேவை குழுவை சார்ந்த 100 பேர் காஷ்மீர் எல்லையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Gujarat pak special army try to attack intelligent police gives warning


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->