டிக் டாக் செயலியில் காவல் உடையில் ஆட்டம் போட்ட பெண் காவல் அதிகாரி.. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் வசித்து வரும் பெண்மணியின் பெயர் ஆர்பிதா சவுத்ரி. இவர் காவல் அதிகாரி ஆவார். இவர் டிக் டாக் செயலியின் மூலமாக பல விடீயோக்களை பதிவு செய்து வந்த நிலையில், இவரை பல இலட்சக்கணக்கான நபர்கள் பின்தொடர்பாளராக இருக்கின்றனர்.

இந்த நிலையில், இவரின் மீது பல்வேறு புகார்கள் அடுத்தடுத்து எழுந்ததால் கடந்த 2018 ஆம் வருடத்தின் போது அங்குள்ள மெஹசானா மாவட்டத்தின் லாங்ஹனாஸ் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டாலும், டிக் டாக் மோகத்தை கைவிட இயலாது தொடர்ந்து விடீயோக்களை பதிவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், காவல் நிலையத்தின் கைதி அறைக்கு முன்பாக டிக் டாக் பாடலுக்கு நடனம் ஆடுவது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலானது..

இந்த பாடலுக்கான ஆட்டமும் இரண்டே நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்ற நிலையில், தற்போது அதிரடியாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் பணியிடைநீக்கம் செய்து அறிவிக்கப்பட்டாலும், டிக் டாக் செயலியில் தொடர்ந்து பல விடீயோக்களை பதிவு செய்து வருகிறார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Gujarat lady cop tic tok video and now suspended


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->