பணியின் போது மாதவிடாய் ஏற்படுவதை தவிர்க்க கருப்பையை அகற்றும் இளம்பெண்கள்.! வெளியான பேரதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் கரும்பு தோட்டங்களில் பணியாற்றி வரும் பெண்களில் பலர்.,  வேலையின் காரணமாக கருப்பையை அகற்றுவதாக அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட்., ஆஸ்மானாபாத்., சன்கிலி மற்றும் சோலாப்பூர் பகுதியில் இருக்கும் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்க்காக பல்வேறு பகுதிகளுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள மக்களில் பெரும்பாலான மக்கள் அங்கிருக்கும் கரும்பு தோட்டங்களில் சுமார் ஆறு மாத காலங்கள் தங்கியிருந்து அறுவடை பணிகளை செய்து வருகின்றனர். 

sugar cane

இந்த சமயத்தில் அதிகளவில் பெண்கள் பணிகளுக்காக உட்படுத்தப்படுவதால்., கடினமான பணியும் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கடினமான பணிகளாக இருந்தாலும் பெண்கள் பணியாற்றி வரும் நிலையில்., மாதவிடாய் நேரத்தில் விடுமுறை எடுத்தால் வேலை பாதிப்புகள் ஏற்படும் என்ற காரணத்தால் பெண்களை பணிக்கு நியமிப்பதும் பிரச்சனையாக கருதப்படுகிறது. 

Tamil online news Today News in Tamil

பிற காரணங்களை கூறி பெண்கள் பணிக்கு வர மறுப்பு தெரிவித்தால் அபராதம் செலுத்தவேண்டும் என்ற கட்டாயமும் உள்ளதால் எந்த விதமான அடிப்படை வசதியும் இல்லாத சூழலில் கூட., சிறிய அளவிலான குடிசைகளில் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். இதுமட்டுமல்லாது அறுவடையின் போது பெண்கள் இரவு நேரத்தில் கூட தொடர் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. 

இதன் காரணமாக பல விதமான தொற்று நோய்களுக்கு உள்ளாகியிருக்கும் சூழலில்., சிறிய பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அங்குள்ள சூழ்நிலையின் காரணமாக கருப்பையை எடுப்பதற்கு மருத்வவர்கள் கூட பரிந்துரை செய்து வருகின்றனர். இதுமட்டுமல்லாது இளம்வயதுள்ள பெண்கள் கூட குடும்ப பின்னணி மற்றும் பிற காரணத்தால் கருப்பை எடுக்க முடிவு செய்து., கருப்பையை அகற்றுகின்றனர். 

இந்த நிலையானது தொடர்ந்து வந்ததன் காரணமாக அங்குள்ள சில கிராமங்கள் கருப்பை அற்ற பெண்களை கொண்ட கிராமங்களாகவே உருவாகியுள்ளது. இதுமட்டுமல்லாது சரியாக 40 வயதிற்கும் குறைவான பெண்கள் தங்களின் கருப்பையை முன்னதாகவே அகற்றுவதால் சில உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். இதனை போன்று தமிழகத்திலும் உள்ள ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் பணியாற்றவும்., மாதவிடாயின் வலியை தவிர்ப்பதற்கும் மாத்திரைகள் வழங்கப்படும் நிலையும் நடைபெற்று வருகிறது. 

periods, periods days, Menopause

பெரும்பாலும் இது போன்ற மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே வழங்கப்பட்டு வருவதால் பெண்களுக்கு மன அழுத்தம்., பதற்றம்., கருப்பையில் கட்டிகள்., சிறுநீர் குழாயில் தொற்று., கருக்கலைப்பினால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை உள்ளாகியும் வருகின்றனர். தமிழகத்தின் ஆடை தொழிற்சாலையில் நடைபெறும் பிரச்சனையை கவனித்த தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Gujarat girls remove Uterus for work and avoid periods


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->