சிறார் சீர்திருத்த பள்ளியில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுமிகள்..!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் ஒதவ் பகுதியில் சிறுமிகளுக்கான சிறார் ஜெயில் செயல்பட்டு வருகிறது. இந்த சிறையில், கடந்த 2017 ஆம் வருடத்தின் போது சிறுமியை, அவருடன் சிறையில் இருந்த இரண்டு சிறுமிகள் சேர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். 

மேலும், சிறுமி உடைமாற்றும் நேரத்தில் அவரை கட்டாய பாலியல் பலாத்காரம் செய்வதும், சிறுமியின் அந்தரங்க பகுதியில் தொட்டு இச்சைக்கு அழைத்து வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.  

தான் சந்தித்து வரும் பல இன்னல்கள் குறித்து சிறை அதிகாரிகளுக்கு கண்ணீருடன் தெரிவிக்கவே, இதனை அறிந்த அதிகாரிகள் இரண்டு சிறுமிகளின் மீதும் மகிளா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

sexual abuse, sexual torture, sexual harassment,

இதன்பின்னர் இவர்களின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இரண்டு சிறுமிகளையும் மற்றொரு சிறார் பள்ளிக்கு மாற்றி உத்தரவிட்டனர். 

இதற்கு பின்னர் ஒரு சிறுமிக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்த நிலையில், மற்றொரு சிறுமியின் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததன் காரணமாக அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி ஸ்கிசோபெர்னியா (schizophrenia) என்கிற மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால், இதற்கான சிகிச்சையும் எடுத்துக்கொண்டு வந்துள்ளார். 

இதனால் இந்த வழக்கு விசாரணையின் போது பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் ஆஜராகாது இருந்த நிலையில், இதற்கான விளக்கத்தையும் வழக்கறிஞர் அளித்திருந்தார். ஆனால் குற்றம் செய்த இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சிறுமிகளையும் நீதிபதி இவ்வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Gujarat girl sexual abuse by two girls


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->