அதிகளவு வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி கனியை எட்டிப்பிடிக்கும் வேட்பாளர்.! கொண்டாட்டத்தில் தொண்டர்கள்.!! - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கையானது துவங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை துவங்கப்பட்ட நிலையில்., சரியாக 08.30 மணிக்கு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கைக்கு துவங்கப்பட்டது. இந்த தேர்தல் பணியில் தமிழகத்தில் சுமார் 45 மையங்கள் அமைக்கப்பட்டு., 17 ஆயிரம் ஊழியர்கள்., 36 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்லலும் நபர்களுக்கு அதிரடி கட்டுப்பாடானது தேர்தல் ஆணையத்தால் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்., இந்தியளவில் பாரதிய ஜனதா கட்சி 341 இடங்களில் முன்னிலையிலும்., காங்கிரஸ் கட்சி 95 இடங்களிலும்., பிற கட்சிகள் 106 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அணி 38 இடங்களிலும்., அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அணி 2 இடங்களிலும்., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 0 இடங்களிலும்., நாம் தமிழர் கட்சி 0 இடங்களிலும்., மக்கள் நீதி மையம் கட்சி 0 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 

சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்த வரையில் திமுக 13 இடங்களிலும்., அதிமுக 089 இடங்களிலும்., அமமுக 0 இடத்தில் முன்னணியில் உள்ளது. புதுச்சேரியை பொறுத்த வரையில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னணியில் உள்ளார்.

இந்நிலையில்., குஜராத் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான அமித் ஷா 8 இலட்சத்து 89 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ள நிலையில்., இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சாவ்டா சுமார் 3 இலட்சத்து 33 ஆயிரம் வாக்குகளை பெற்று பெரும் பின்னணியில் உள்ளார். இவர்கள் இருவருக்கும் சுமார் நான்கு இலட்சத்திற்கும் மேலான வாக்குகளில் வெற்றி பெரும் வாய்ப்புகளில் உள்ள நிலையில்., காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Gujarat bjp candidate amith sha getting better vote compare congress candidate


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->