8 ஆம் தேதிவரை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.! முதலமைச்சர் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


தீபஒளித் திருநாளாலானது கடந்த 27 ஆம் தேதி சிறப்பாக உலகம் முழுவதும் கொண்டடப்பட்டது. காலை எழுந்தவுடன் எண்ணெய் குளியலில் துவங்கி., கறி சாப்பாடு., பட்டாசு வெடித்து கொண்டாடுதல் என்று சிறப்பிக்க கொண்டடப்பட்டது. 

தீபஒளித் திருநாளில் அதிகளவு பட்டாசுகளை வெடித்ததன் காரணமாகவும்., டெல்லிக்கு அருகில் உள்ள மாநிலத்தில் இருக்கும் கரும்பு விவசாயிகள்., விவசாயம் நிறைவு பெற்றவுடன் சக்கையை எரித்து விடுகின்றனர். 

இதனால் அங்குள்ள காற்று டெல்லி நகருக்கு வருகை தந்து மேலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்குள்ள காற்றின் மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ள நிலையில்., மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். 

இந்த நிலையில்., மாணவர்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு டெல்லி மாநிலத்தின் முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால்., டெல்லியில் இருக்கும் பள்ளி மாணவ - மாணவியருக்கு முக கவசங்கள் வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.

காற்றின் தரமானது அதிகளவு மோசமாகிக்கொண்டே சென்று கொண்டு இருந்ததால்., கடந்த அறிவிப்பின் படி 5 ஆம் தேதி வரை டெல்லி மாநிலத்தில் உள்ள பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. 

காற்று மாசுபாட்டை கட்டுக்குள் வைக்க பல விதமான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில்., காற்று மாசுபாடு இன்னும் குறையாததால் வரும் 8 ஆம் தேதி வரை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும்., தேர்வுகளை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்தும் உத்தரவிட்டுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Delhi school leave announcement by Delhi govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->