டெல்லி தீவிபத்திற்கு காரணம் என்ன?..! கைதான உரிமையாளர்., வெளியாகும் தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் உலகம் முழுவதும் பல்வேறு விபத்துகள் அரங்கேறி., இதனால் பலர் பரிதாபமாக உயிரிழந்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது. ஒரு சில இடங்களில் அதிஷ்டத்தின் காரணமாக மக்கள் தப்பித்தாலும்., சில இடங்களில் நடைபெறும் விபத்துகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக பலியாகி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள ராணி ஜான்சி சாலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

மேலும் இதற்கு அருகில் இருக்கும் அனாஜ் மண்டி என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 50 க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

delhi fire accident,

சுமார் 30 தீயணைப்பு வாகனங்களில் சென்றுள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் 32 பேர் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும்., 16 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில்., தற்போது வரை மொத்தமாக பலியானோரின் எண்ணிக்கையானது 43 ஆக உயர்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., இது குறித்து தகவலறிந்த மத்திய அரசு மற்றும் மாநில அரசின் சார்பாக தேவையான உதவிகள் செய்யப்பட்டு., பலியானவர்களின் குடும்பத்தாருக்கு நிதியுதவியும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும்., இக்கட்டிடத்தின் உரிமையாளர் தலைமறைவாக இருந்த நிலையில்., அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in delhi fire accident police arrest building owner


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->