8 வயது சிறுமியின் மூளையில் இருந்த 100 க்கும் மேற்பட்ட உயிரினத்தின் முட்டைகள்.!! அதிர்ச்சியான மருத்துவர்கள்.!! - Seithipunal
Seithipunal


டெல்லி நகரில் இருக்கு பகுதியில் வசித்து வருபவர் லீமா (வயது 8). இவர் கடந்த 6 மாதங்களாக கடுமையான தலை வலியால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் இதனை கவனித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூளையில் ஏற்பட்ட வீக்கத்தை குறைப்பதற்காக ஸ்டீராய்டு மருந்துகளை வழங்கியுள்ளனர். இந்த மருந்தை உட்கொண்ட சிறுமியின் உடல் எடையானது 40 கிலோவாக அதிகரித்துள்ளது. 

கடுமையான தலைவலி., உடல் எடை அதிகரித்ததன் காரணமாக இருந்த பிரச்சனை என்று கடுமையாக அவதியுற்று வந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவரிடம் சமர்ப்பித்த நிலையில்., சிறுமிக்கு சிடி ஸ்கேன் எடுத்துள்ளனர். 

அந்த சமயத்தில் சிறுமிக்கு நியூரோ சிஸ்டிக் சிரோஸிஸ் (neuro cystic sarcosis) என்ற நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து மேற்கொண்ட சிகிச்சையில் அவரது மூளைக்குள் வெள்ளை நிறத்தை கொண்ட புள்ளிகள் தோன்றியுள்ளது. 

அந்த வெள்ளை நிற புள்ளிகள் குறித்து சிகிச்சை மேற்கொண்ட சமயத்தில் அவை அனைத்தும் நாடாப்புழுக்கள் என்பது தெரியவந்தது. மேலும்., நாடாப்புழுக்களின் அழுத்தத்தின் காரணமாக அவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அவருக்கு அழுத்தம் குறைவான மருந்துகளை வழங்கி பின்னர்., நாடாப்புழுவின் முட்டைகளை கொள்வதற்கு மருந்துகள் வழங்கப்பட்டு உள்ளது. 

இது குறித்து மருத்துவர்கள் தெரிவித்தாவது., அவரது மூளையில் இருக்கும் நாடாப்புழுக்களை அளிப்பதற்கு தொடர்ந்து அதிகளவு மருந்து கொடுத்து வந்தால் அவருக்கு கூடுதல் வலி மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பிரச்சனைக்கு மெதுவாக சிகிச்சை முறையை மேற்கொள்வதே நல்லது. 

மேலும்., சரியான வேக வைக்காத உணவு பொருட்களை சாப்பிடும் பட்சத்தில் அதில் உருவாகும் புழுக்களின் மூலமாக நாடாப்புழுக்கள் அதிகளவில் உடலில் உற்பத்தி ஆகின்றது என்று தெரிவித்தனர். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Delhi a girl affected by brain Tapeworms issue


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal