சென்னை பெண்ணை கடத்தி கொலை செய்த பெங்களூர் நிலத்தரகர்.! விசாரணையில் கூறிய அதிர்ச்சி வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்துள்ள மடிப்பாக்கம் இராஜஇராஜேஸ்வரி நகர் பகுதியை சார்ந்தவர் விஜயலட்சுமி (வயது 60). இவர் கடந்த நான்காம் தேதியன்று., சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது குடும்ப வக்கீலை சந்திக்க செல்வதாக கூறி சென்ற நிலையில்., மீண்டும் வீடு திருப்பவில்லை. மேலும்., தங்கையை தேடி அலைந்த அண்ணன்., தங்கையை காணாது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர்., காணாமல் போன விஜயலட்சுமியை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில்., விஜயட்சுமியின் அலைபேசி எண்ணை அறிந்து., அதனை ஆய்வு செய்ததில்., இறுதியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியை சார்ந்த பாஸ்கர் (வயது 33) என்பவரிடம் பேசியது தெரியவந்தது. மேலும்., பாஸ்கர் நிலத்தரகராக பணியாற்றி வருகிறார். 

missing, காணவில்லை,

இதனையடுத்து பெங்களூருக்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., பெங்களூர் சிங்கன்தரா கிராமத்தில் இருந்த பாஸ்கரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்.,  சென்னை மடிப்பாக்கத்தை சார்ந்த விஜயலட்சுமிக்கு பெங்களூரில் உள்ள கே.ஆர்.புரம் பகுதியில் சொந்த வீடானது இருந்துள்ளது. 

இந்த வீட்டினை விற்பனை செய்வதற்காக அடிக்கடி பெங்களூருக்கு விஜயலட்சுமி வருகை தந்ததை அடுத்து., எங்களுக்கு நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டது. மேலும்., வீட்டை விற்பனை செய்வது குறித்து., கடந்த இரண்டு வருடங்களாக அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவேன். இந்த வீட்டினை விற்பதாக கூறி சிலரிடம் பணம் வாங்கியதை அடுத்து., பணம் கொடுத்தவர்கள் வீட்டினை வாங்கித்தரக்கூறி கட்டாயப்படுத்தி வந்தனர். 

இந்த நிலையில்., கடந்த மாதத்தின் 4 ஆம் தேதியன்று வக்கீலை சந்திக்க சென்ற விஜயலட்சுமிக்கு தொடர்பு கொண்டு., வீட்டினை ரூ.1 கோடி 20 இலட்சம் மதிப்பில் பெறுவதற்கு ஆள் வந்திருப்பதாக கூறி., பெங்களூருக்கு அழைத்து வந்தேன். பெங்களூருக்கு வரும் வழியில்., மயக்க மாத்திரை கலந்த குளிர்பானத்தை குடுத்த நிலையில்., காரியிலே மயங்கியிருந்தார். 

died, murder, killed, suicide attempt, கொலை, தற்கொலை, குற்றம்,

பெங்களூருக்கு வந்து எழுப்பியும் அவர் எழவில்லை. இதனையடுத்து நான் அளவுக்கு அதிகமாக குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்தது தெரியவந்தது. இவர் எழுந்திருக்காததால்., விஜயலட்சுமி இறந்துவிட்டார் என்று எண்ணி எரித்துவிட்டேன். இவருக்கு யாரும் உறவினர்கள் இருப்பார்கள் என்று நான் எண்ணவில்லை. விஜயலட்சுமியை கொலை செய்த பின்னர்., வீட்டை நாமே விற்பனை செய்யலாம் என்று திட்டம்போட்டேன். 

இந்த நிலையில்., காவல் துறையினரின் விசாரணைக்கு பின்னர் நான் மாட்டிக்கொண்டேன். காவல் துறையினருக்கு பயந்து சிங்கந்தரா பகுதியில் பதுங்கியிருந்த என்னை எப்படியோ காவல் துறையினர் கண்டுபிடித்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai girl kidnapped and killed by land porker in Bangalore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->