வேலைக்காக அலைந்த இளைஞர்களை குறிவைத்து மிகப்பெரிய மோசடி..! வெளியான பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு அதிகரிக்கான பணி., மின்வாரிய உதவி பொறியாளருக்கான பணி மற்றும் ஆசிரியர் பணி போன்ற பல்வேறு பணிகளை வாங்கி தருவதாக கூறி., வீரேஸ்வரர் (வயது 29) என்பவர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினருக்கு தொடர் புகார் வந்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து சென்னை காவல் கண்காணிப்பாளரான ஏ.கே.விசுவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி மற்றும் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

arrest,

இந்த விசாரணையில்., வேலையை தேடி அலைந்து கொண்டு இருக்கும் அப்பாவி இளைஞர்களை குறிவைத்து., அரசு பணி வாங்கி தருவதாக கூறி இலட்சக்கணக்கில் பணம் ஏமாற்றியதும்., இதற்காக போலி வேலைவாய்ப்பு ஆணைகளையும் வழங்கப்பட்டு வந்தது தெரியவந்தது. 

இந்த விசாரணை தொடர்பாக சென்னை., ஈரோடு மற்றும் மதுரை உள்ளிட்ட பல மாவட்டத்தை சார்ந்த சுமார் 73 பேரிடம் ரூ.மூன்றரை கோடி ரூபாய்க்கு மேலாக மோசடி செய்ததும் தெரியவந்ததை அடுத்து., மோசடியில் ஈடுபட்ட வீரேஸ்வரர் கைது செய்யப்பட்ட நிலையில்., இவருக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர்களையும் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai fake govt job culprit arrest by police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->