புல்லட் இரயில் திட்டம்.. ஒதுக்கீடு செய்யப்பட்ட கோடிகள்.. முட்டிக்கொள்ளும் மத்திய மாநில அரசுகள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் அதிவிரைவு இரயில்களை கொண்டு வரும் பணிகளை மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கி மும்பை - அகமதாபாத் இரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்பட இருக்கிறது. 

இந்த பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், சுமார் 90 விழுக்காடு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது என்று இரயில்வே வாரியம் நம்பிக்கையை தெரிவித்துள்ளது. இதன் மூலமாக சுமார் 508 கிமீ தொலைவுள்ள பயணத்தை இரண்டு மணிநேரத்தில் கடந்துவிடலாம். 

இந்த முதற்கட்ட பணிகள் அனைத்தும் விரைவாக நடந்து முடியும் பட்சத்தில், மும்பை - அகமதாபாத் புல்லட் இரயில் சேவையானது இன்னும் 6 மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும், கடந்த 2023 வருடத்திற்குள் இந்தியா முழுவதிலும் புல்லட் இரயில் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், கடந்த 1 ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டியில் புல்லட் இரயில் திட்டத்திற்காக ரூ.5 ஆயிரம் 600 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசுடைய பங்குகளை தவிர்த்து, நான்கில் ஒரு பங்காக மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மணிலா அரசிடம் இருந்து ரூ.5 ஆயிரம் கோடியை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

uddhav thackeray,

தற்போதையை நிதியாண்டியில் இரண்டு மாநிலத்திற்கும் ரூ.ஆயிரம் கோடி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மும்பை - அகமதாபாத் அதிவேக இரயில் திட்டத்தில் முனைப்புடன் இருந்து வருகிறார். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். 

மேலும், புல்லட் இரயில் திட்டத்தின் மூலமாக பயன் அடையும் நபர்கள் யார்? மகாராஷ்டிரா அரசுடைய வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கு எப்படி உதவும்? என்று கேள்விகளை எழுப்பினார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in bullet train expense cost announce by govt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->