கிராம மக்கள் மொத்தமாக ஆசிரியரை கொடூரமாக அடித்த சோகம்.! விசாரணையில் வெளியான பகீர் தகவல்.. கண்ணீரில் கிராம மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பாலிவுட் திரையுலகின் நடிகர் அஜாஸ் கான். இவர் தனது ட்விட்டர் பதிவில்., உடலில் இரத்த காயத்துடன் வாலிபர் ஒருவரின் புகைப்படத்தை பதிவு செய்து., இவரது பெயர் அபு காமில், இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்றும்., இவர் முஸ்லீம் மதத்தினை சார்ந்தவர் என்பதால்., இவரை சிலர் கொடூரமாக தாக்கியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த ட்விட்டானது இணையத்தில் வைரலாகி அங்குள்ள வட்டாரங்களில் பெரும் சர்ச்சையான நிலையில்., இந்த தகவலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதில் கூறிய பிரசாந்த் படேல்., இந்த தகவல் பொய்யானது என்றும்., நடிகர் அஜாஸ் கான் பொய்யான தகவலை பரப்பிக்கொண்டு உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். 

இதுமட்டுமல்லாது புகைப்படத்தில் இருக்கும் வாலிபர்., பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததன் காரணமாக தாக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த பதிவானது இணையத்தில் வைரலாகியதை தொடர்ந்து., இந்த செய்தியின் உண்மை தன்மையை அறிந்த தருணத்தில்., இந்த தகவல்கள் பொய்யானது என்று தெரியவந்துள்ளது. 

twitter, twitter trending in bihar,

இது குறித்த உண்மை தகவலாவது., பீகாரின் தலைநகரான பாட்னாவில் உள்ள பயிற்சி மையம் நடத்திக்கொண்டு வரும் அபு காமில் என்ற நபர்., கடந்த செப்டம்பர் மாதத்தின் 22 ஆம் தேதியன்று தனது இல்லத்திற்கு சென்று கொண்டு இருந்துள்ளார். 

இந்த தருணத்தில்., இவரை இடைமறித்த கொள்ளை கும்பலானது., அபு காமிலை கடத்தி சென்று., அவரை கடுமையாக அடித்து உதைத்து., பணத்தை கொள்ளையடித்து விட்டு., ஓடும் காரில் இருந்தபடியே அபு காமிலை தள்ளிவிட்டு சென்றுள்ளது. 

சாலையின் ஓரமாக வலியால் துடித்துக்கொண்டு இருந்த நபரை பார்த்த அப்பகுதி கிராம மக்கள்., அதிர்ச்சியடைந்து திருடன் என்று எண்ணி அடித்துள்ளனர். இந்த தருணத்தில்., காவல் துறையினர் வந்து விசாரணை மேற்கொண்ட பின்னர்., அபு காமிலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இந்த ட்விட்டர் பதிவுகள் போலியானது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும்., மக்களால் நன்கு அறியப்பட்ட நபர்கள்., செய்திகளின் உண்மை தன்மையை அறிந்து கொண்டு பதிவு செய்வது நல்லது என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Bihar teacher attack by village peoples due to doubt thief


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->