காப்பகத்தில் இருந்த 35 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள முஸாபர்பூரில் அரசு நிதியுதவி பெரும் சிறுமியர் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தை பிரஜேஷ் தாகூர் என்பவர் நடத்தி வந்தார். இந்த காப்பகத்தில் இருக்கும் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக புகார்கள் அடுத்தடுத்து எழுந்தது. 

பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், காப்பகத்தில் இருக்கும் 35 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில் 35 சிறுமிகளும் பலாத்காரத்திற்கு உள்ளானது தெரியவந்தது. 

இந்த விஷயம் வெளியே தெரியவந்து பெரும் விஸ்வரூபம் எடுக்கவே, இந்த விஷயத்தில் மக்கள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பிரஜேஷ் குமார் உள்ளிட்ட 11 பேரின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த விவகாரம் தொடர்பான விஷயத்தில் பீகார் காவல் துறையினரின் விசாரணை மனநிறைவான இல்லை என்று கூறி தொடுக்கப்பட்ட பொதுநலமனுவை அடுத்து, இதற்கான சி.பி.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, இது தொடர்பான விசாரணையையும் டெல்லியில் இருக்கும் சாஹித்தி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. 

தற்போது இந்த வழக்கில் கைதாகியுள்ள 20 பேரின் மீதும் பாலியல் பலாத்காரம், குழந்தையை கொடுமை செய்தல் போன்ற பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நேரத்தில், ஒருவரை மட்டும் வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்தது. 

இந்த நிலையில், இது தொடர்பான விசாரணைக்கு பின்னர் 8 பெண்கள் உள்ளிட்ட 19 பேர் குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்டு, நீதிமன்றமும் அனைவரையும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. இவர்களின் தண்டனை விபரமும் இம்மாதத்தின் (ஜனவரி 28) ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Bihar 35 child girl abused in govt aided girl safety home court order


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->