முகக்கவசம் இல்லையேல் ரூ.1000 அபராதம்.. மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் புவனேஸ்வர் மாநிலத்தில் உள்ள ஒடிசா கஞ்சம் பகுதியில், முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு ரூ.1000 அபராதம் வசூல் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக முகக்கவசம் அல்லது கைக்குட்டை போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக பேசிய அம்மாவட்ட ஆட்சியர் விஜய் அம்ருதா குலங்கெ, வீட்டினை விட்டு மக்கள் வெளியே வரும் நேரத்தில் முகக்கவசம் அல்லது கைக்குட்டை மூலமாக முகத்தை மறைக்காமல் நடமாடினால் ரூ.1000 அபராதம் வசூல் செய்யப்படும். 

கிராமப்புற பகுதியில் ரூ.500 அபராதம் வசூல் செய்யப்படும். முகக்கவசம், கைக்குட்டை அல்லது ஸ்கர்ப் போன்றவை கட்டாயமான ஒன்று என்று தெரிவித்தார். இதனைப்போல தேவையில்லாத காரணத்தால் தெருவில் நடமாடினால் காவலில் எடுக்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Bhubaneswar district collector strict order to wear mask


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->