2 குழந்தைக்கு மேல் பெற்றுக்கொண்டால் எதுவுமே கிடையாது..! மாநில முதல்வர் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியானது நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக சர்பானந்தா சோனோவால் செயல்பட்டு வருகிறார். இந்த சமயத்தில்., அசாம் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேலாக குழந்தை பெற்றெடுத்தவர்களுக்கு அரசு பணிகள் கிடைக்காது என்ற உத்தரவானது தற்போது அமலுக்கு வந்துள்ளது. 

அசாம் மாநிலத்தில் கடந்த 2017 வருடத்தின் துவக்கத்தில் இருந்து மக்கள் தொகையை கட்டுக்குள் வைப்பதற்கு சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதன் அடிப்படையில் சிறிய குடும்பத்திற்கு ஊக்கம் அளித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தின் போது அசாம் சட்டசபையில்., இரண்டு குழந்தைக்கு மேல் இருப்பவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் பங்கேற்க முடியாது என்று மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. 

இந்த தருணத்தில்., மக்கள் தொகை கொள்கை தொடர்பான அமைச்சரவை கூட்டமானது முதல்வரின் தலைமையில் நடைபெற்ற நிலையில்., வரும் 2021 ஆம் வருடத்தின் ஜனவரி மாதம் முதல் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் அனைவரும் அரசு பணிக்கு விண்ணப்பம் அனுப்ப தகுதியில்லை என்றும்., தற்போது பணியில் இருக்கும் நபர்களும் இதே விதியினை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுமட்டுமல்லாது நிலமில்லாத அசாம் மக்களுக்கு அரசே நிலம் வழங்குவதோடு மட்டுமில்லாமல்., வழங்கும் இலவச நிலங்களை 15 வருடத்திற்கு விற்பனை செய்ய இயலாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Assam chief minister order to two babies


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->