மாத வருமானம் 5000 கூட இல்லை.. கோடிக்கணக்கில் நில மோசடி.! எதிர்க்கட்சி பலே பலே.!! மொத்தமும் அம்பலம்.!! - Seithipunal
Seithipunal


தெலுங்கு தேசம் கட்சியை சார்ந்த நபர்கள் ஆந்திராவை ஆட்சி செய்த நேரத்தில், தற்போது புதிய தலைநகராக அறிவிப்பு செய்யப்பட்ட அமராவதியை சுற்றிலும் கோடிக்கணக்கான ரூபாய்கள் நில மோசடி நடந்திருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 

அமராவதி நகரின் மையப்பகுதியில் கடந்த 2014 ஆம் வருடம் மற்றும் 2015 ஆம் வருட காலகட்டத்தில் சுமார் ரூ.220 கோடிக்கு 761 ஏக்கர் அளவுள்ள நிலங்கள் பரம ஏழைகளுடைய பெயரில் வாங்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த நிலங்கள் சுமார் 797 நபர்களின் பெயர்களில் வாங்கப்பட்டுள்ளதும், இவர்களில் பெரும்பாலானோருக்கு மாதம் வருமானம் ரூ.5 ஆயிரம் கூட கிடைக்காது என்ற உண்மை தெரியவந்துள்ளது. 

மேலும், இவர்களில் 529 பேருக்கு பான் அட்டை கூட இல்லை என்பதும் சி.ஐ.டி காவல் துறை அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆந்திரபிரதேச சி.ஐ.டி காவல் துறையினர் ஏமாற்றுதல் மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்த வழக்குப்பதிவுகளின் கீழ் தெலுங்குதேச முன்னாள் அமைச்சர் புல்லா ராவ் மற்றும் நாராயணாவின் மீது வழக்குப்பதிவு செய்து, வருமானவரி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கை அமலாக்கப்பிரிவு துறை சார்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in andra predesh Telugu Desam Party Deepak Reddy arrested land forgery


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->