வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் 12 பேர் பரிதாப பலி.! 340 பேரின் உயிர் மருத்துவமனையில் ஊசல்.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கமானது கடுமையாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் கடுமையான துன்பத்தை அனுபவித்து வரும் நிலையில்., ஆந்திர மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கமானது 110 டிகிரிக்கும் அதிகளவு அடிப்பதால்., வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தப்பிக்க இயலாமலும்., அனல் காற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இயலாமலும் இருந்து வருகின்றனர். 

வெயிலோடு சேர்ந்து வெப்பக்காற்றும் மக்களை வாட்டி வதைத்து வருவதன் காரணமாக., மக்கள் கடுமையான துன்பத்தை தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர். இதன் காரணமாக வாகனங்களில் கூட செல்ல இயலாமல் பரிதவித்து வந்த நிலையில்., இந்த வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் சுமார் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

இந்த வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 340 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில்., அதிகபட்சமாக அங்குள்ள பிரகாசம் மாவட்டத்தில் சுமார் 114.26 டிகிரி வெப்பமானது பதிவாகியுள்ளது. நெல்லூர் பகுதியில் 113.36 டிகிரி வெப்பமும்., குண்டூரில் 113.18 டிகிரி வெப்பமும் பதிவாகி வருகிறது. 

இதுமட்டுமல்லாது கடப்பாவில் 113 டிகிரி வெப்பமும்., பிற மாவட்டங்களில் சுமார் 107.6 டிகிரி முதல் 113 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது. வரும் 25 ஆம் தேதி முதல் கடுமையான வெப்ப காற்றானது வீசும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில்., பல இடங்களில் வெயிலின் தாக்கமானது சுமார் 113 டிகிரி முதல் 118 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

காற்றில் இருக்கும் ஈரப்பதமானது வெகுவாக குறைந்ததன் காரணமாக வெயிலுடன் சேர்ந்து கடுமையான காற்றானது வீசும் என்றும்., இதன் காரணமாக பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்., முடிந்தளவு உடலுக்கு குளிர்ச்சியை வழங்கும் இயற்கையான உணவு மற்றும் பழவகைகளை சாப்பிட அறிவுரை வழங்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in andra predesh peoples died for heavy summer heat problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->