கணவர் வாரத்திற்கு ஒரு முறை மட்டும் தான் இதை செய்கிறார்... மனைவி எடுத்த அதிரடி முடிவு.!! - Seithipunal
Seithipunal


நம் நாட்டில் விவாகரத்து கேட்கும் பெண்கள் கருத்து வேறுபாடு, கணவன் அல்லது அவரது குடும்பத்தினர் செய்யும் கொடுமை, கணவன் குடிக்கிறார், வேறு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார், ஆண்மை இல்லை, இவ்வாறு பல காரணங்களை கூறி பெண்கள் விவகாரத்து பெறுவதுதான் வழக்கம்.

ஆனால் மத்திய பிரதேசம் மாநிலம்  போபால் அருகே பாரிகார் என்ற பகுதியைச் சேர்ந்த இளம் பெண்(23 வயது) ஒருவர் தனது கணவர் வாரம் ஒருமுறை மட்டுமே குளிக்கிறார், ஒழுங்காக சேவ் செய்வதில்லை என்றும் புகார் கூறி அவருடன் வாழ முடியாது என்று விவகாரத்து கேட்டு வழக்கு தொடந்துள்ளார். 

இருவருக்கும் திருமணம் ஆகி ஓராண்டு தான் ஆகிறது. அதிலும் இந்த தம்பதிகளுக்கு குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் சம்மதத்துடன், போபால் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

நீதிமன்றம் இவர்களை 6 மாதம் பிரிந்து இருக்கும் படி கூறியுள்ளது. அதன் பிறகு விவாகரத்து குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என அவர்களது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார். இவர்களது விவகாரத்தில் அவர்களது பெற்றோர்களுக்கு உடன்பாடில்லை என்றும் கூறப்படுகிறது.

English Summary

husband and wife divorce


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal