தெலுங்கானா என்கவுண்டர்..  பொங்கி எழுந்த மனித உரிமை ஆணையம்..!  - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு எதிரான நடந்து வரும் பாலியல் வன்கொடுமைக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் என்பது தான் அனைவரின் குறிக்கோளாக இருந்து வருகிறது. அந்த வகையில், சென்ற வாரம் ஹைதராபாத்தில் நடந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது, பிரியங்கா ரெட்டி என்பவரை 4 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து எரித்து கொன்ற சம்பவம் தான் அது.

இந்த வழக்கில் கைதான நான்கு பேரையும் போலீசார் அதிகாலை 3 மணி அளவில் என்கவுண்டர் செய்து சுட்டு கொன்றனர். அதிகாலையில் நடத்தப்பட்ட இந்த என்கவுண்டரை பற்றி நாடே பேசியது. மேலும், இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தார்கள். அதேசமயம் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தாமல்  காவல்துறை என்கவுண்டரில்  சுட்டு கொன்றது வன்முறை என்று மற்றொரு தரப்பினர் அவர்கள் வாதத்தை முன்னிறுத்தி வருகின்றனர். 

இதற்கிடையே, நீதிமன்ற அளித்த உத்தரவு படி சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவை முழுவதும் வீடியோவாக எடுக்கப்பட்டது. மேலும் குற்றவாளிகளின்  உடலை பதப்படுத்தி வைக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்ந்து ஹைதராபாத் சென்ற 7 பேர் கொண்ட தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மகபூப் நகர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தார்கள். 

இதை தொடர்ந்து, என்கவுண்டர் செய்த இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார்கள். இதற்கு அந்த பகுதி மக்கள், அந்த பெண் எரித்து கொல்லப்பட்ட போது  இவங்க எல்லாம் எங்க போனாங்க என்று அவர்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக  விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை  தெலங்கானா அரசு அமைத்திருக்கிறது. 

மேலும், தெலங்கானா தலைமைச் செயலாளர் எஸ்.கே.ஜோஷி பிறப்பித்துள்ள உத்தரவில், பெண் மருத்துவர் கொலையோ மற்றும் என்கவுண்டர் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  ரச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ் எம். பகவத் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் 7 அதிகாரிகள் இடம் பெற்றிருக்கிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

human rights commision investigation about telangana encounter


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->