பயமே வேண்டாம்!! கொரோனாவில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது?!! - Seithipunal
Seithipunal


சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸானது பரவ தொடங்கியுள்ளது.

இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் என்ற உடனே இதை பற்றி நாம் அச்சம்பட சமூகவலைத்தளத்தில் பரவும் சில பொய்யான தகவலும் காரணம். எனவே இதனை கண்டு நாம் அச்சப்படத் தேவையில்லை. வேகமாக பரவி வரும் இந்த வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான சில வழிகளை இங்கு காண்போம்.

இரும்பும் போதோ அல்லது தும்மும் போதோ கைகுட்டை கொண்டு இரும்பவது நல்லது.

தொடர் சளி, இருமல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

மேலும் சுவாசிப்பதில் கஷ்டமாக இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது சிறந்தது.

மற்றவருடன் உரையாடும் பொழுது சற்று இடைவெளியுடன் நின்று உரையாடுவது நல்லது.

அதிக கூட்டங்கள் இருக்கும் பகுதிக்கு செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும்.

உயர்ரக முகமூடியை வாங்கி அணிந்து கொள்வது வைரஸில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும். 

அடிக்கடி முகத்தில், வாய் மற்றும் மூக்கு பகுதியில் கைகளை கொண்டுபோகாமல் இருப்பது நல்லது. 

ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை கைகளை சுத்தம் செய்து கொள்ளவேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to protect ourselves from corona virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->