எமனாக மாறிவரும் கொரோனா! குழந்தைகளுக்கு பரவாமல் தடுக்க என்ன செய்யலாம்?! - Seithipunal
Seithipunal


ந்தியாவில் கொரோனா வைரசால் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கர்நாடக மாநிலம் கல்புர்கியை சேர்ந்த முதியவர் இந்த நோயால் கொல்லப்பட்டதாகவும், 3 பேர் குணமடைந்துள்ளதாகவும், மத்திய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், பல்வேறு பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. குழந்தைகள், முதியவர்களால் இந்த நோயின் தாக்கத்தை எதிர்கொள்வது கஷ்டம் என்பதால், அவர்களுக்கு வருமுன் காப்பதே சிறந்தது.

குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க சில டிப்ஸ்:-

உங்கள் குழந்தையுடன் பேசுங்கள், இந்த நோய் தடுப்புக்கு, எதிரான சிறந்த ஆயுதம் விழிப்புணர்வுதான். நல்ல சுகாதாரத்தை பராமரிப்பது மிக முக்கியம். எப்போதும் ஒரு சானிடைசரைபையில் வைத்திருக்கவும்.

தும்மல் அல்லது இருமல் உள்ளவரிடமிருந்து குறைந்தபட்சம் 1 மீற்றர் அல்லது 3 அடி தூரத்தில் தள்ளி இருக்க உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். இது எல்லா வகை வைரஸ் பி ரச்சினைகளையும் கட்டுப்படுத்தும்.

பாதுகாப்பு என்பது இரு வழி செயல்முறை. குழந்தையை பாதுகாப்பாக வைத்திருப்பதோடு உங்களுடைய பொறுப்பு முடிவடையாது.

வயிற்றுப்போக்கு, ஃபுட் பாய்சன், வாந்தி போன்ற பல உணவு தொடர்பான நோய்களை எதிர்கொள்ளவும், கொரோனா வைரஸை எதிர்கொள்ளவும், பாதுகாப்பான முறையில், உணவு தயாரித்தல் அவசியம்.

கொரோனா வைரஸை எ திர்த்துப் போ ராடுவதற்கான மற்றொரு சிறந்த வழி, உங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது. குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால், பூங்கா, கேளிக்கை பகுதிகள், அம்யூஸ்மென்ட் பார்க், தியேட்டர்கள் போன்ற மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடங்களுக்கு கூட்டிச் செல்லாதீர்கள்

நோய்வாய்ப்பட்டவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் உங்கள் குழந்தைகளை வைத்திருங்கள். நோ ய் அ றிகு றி உள்ளவர்கள் பயன்படுத்தும் பாத்திரங்கள், உணவு மற்றும் டவல் போன்ற ஆடைகளை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to protect our children from corona virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->